சிவாஜி ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நாகேஷா? போட்ட சவால் எல்லாம் போச்சே.. இது தேவையா?

Sivaji Nagesh: தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அதே போல் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பும் மிக முக்கியமாக இருந்த காலம் சிவாஜி - எம்ஜிஆர் காலகட்டம்தான். அந்த காலத்தில் ஹீரோக்களுடனேயே நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் பயணப்படும். ஹீரோக்களுக்கு இணையான ஸ்கோரை நகைச்சுவை நடிகர்களும் மிக எளிதாக பெற்று விடுவார்கள்.

ஆனால் சமீபகால படங்களில் பாடலும் இல்லை. காமெடியும் இல்லை என்பதுதான் சோதனை. அந்த வகையில் எம்ஜிஆர் - சிவாஜி காலகட்டத்தில் பெருமளவில் போற்றப்பட்ட காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் நாகேஷ். அவரை பின்பற்றியே பல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் இப்போது மீடியாக்களில் முயற்சி செய்து வருகிறார்கள். நகைச்சுவை நடிகராக, ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக என பல அவதாரங்களில் கலக்கியவர் நாகேஷ்.

இதையும் படிங்க: குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..

இந்த நிலையில் சிவாஜி நடிக்க இருந்த கதையில் நாகேஷ் நடித்து அந்தப் படத்தின் ரிசல்ட் என்ன என்பதைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம். சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் எழுதிய ‘யாருக்காக அழுதான்’ திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்தப் படத்தை ஸ்ரீதர்தான் இயக்க இருந்தது. அந்த காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆரை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்த சரவணா ஃபிலிம்ஸ் தான் யாருக்காக அழுதான் திரைப்படத்தையும் தயாரிக்க இருந்தது.

அதனால் ஒரே நேரத்தில் மூன்று படங்களின் பூஜைகளையும் பிரம்மாண்டமாக போட்டார் சரவணா ஃப்லிம்ஸ் நிறுவனரான ஜிஎன். வேலுமணி. யாருக்காக அழுதான் திரைப்படத்துடன் ஒரு ஹிந்திப் படம், இது என் சத்தியம் என்ற பெயரில் மற்றுமொரு திரைப்படம் இவற்றின் பூஜைகளும் ஒரே நேரத்தில் போடப்பட்டன. இந்த விழாவிற்கு அந்த காலத்தில் இருந்த அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டப்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டுமாம்.

இதையும் படிங்க: ஏன் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழு இளையராஜாவை சந்திக்கல? ஒரு வேளை அப்படி எதும் இருக்குமோ?

ஆனால் யாருக்காக அழுதான் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக போடப்பட்டாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தன. அதற்கு காரணமே ஜெயக்காந்தன் தான் என பின்னாளில் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. யாருக்காக அழுதான் திரைப்படத்தை இயக்க இருந்த ஸ்ரீதரிடம் ஜெயக்காந்தன் ‘இந்தக் கதையை என்னைத் தவிற எந்தக் கொம்பனாலும் திறம்பட எழுதி இயக்க முடியாது’ என சவால் விடும் மாதிரி பேசியிருக்கிறார்.

அவ்வளவுதான் ஸ்ரீதர் இதை கேட்டதும் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதன் பிறகு இந்தப் படம் அப்படியே நின்று விட்டதாம். ஆனால் பின்னாளில் அதே ஜெயக்காந்தன் எழுதி இயக்க ‘யாருக்காக அழுதான்’ என்ற அதே பெயரில் நாகேஷ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெற வில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க: அள்ள அள்ள குறையாத அழகு!.. ஐஸ்வர்யா அழகில் சொக்கிப்போகும் ரசிகர்கள்!.. போட்டோஸ் உள்ளே!..

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it