சூர்யாவின் சனிக்கிழமை முதல்நாள் 'வசூல்' எவ்வளவுன்னு பாருங்க!

#image_title
நானி நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் நேற்று வெளியான சூர்யாவின் சனிக்கிழமை திரைபடத்தின் முதல்நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான் ஈ படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நானி. தொடர்ந்து அவரது பல படங்கள் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி வருகின்றன. ஜெர்ஸி உட்பட வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நானி தற்போது கமர்ஷியல் ரூட்டினை குறிவைத்து இறங்கியுள்ளார்.
அந்தவகையில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட ஏராளமானோர் நடிப்பில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 29 ) -ம் தேதி வெளியானது. இந்தநிலையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
அதன்படி ரூபாய் 24.11 கோடியை சூர்யாவின் சனிக்கிழமை படம் பாக்ஸ் ஆபிஸில் ஈட்டியுள்ளது. இதனால் நானியின் மார்க்கெட் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் விரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு தமிழிலும் கிராக்கி ஏற்படக்கூடிய சூழல் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.