டியூன் பிடிக்கலைனு சொன்னதுக்கு இளையராஜா செஞ்ச சம்பவம்! நாசருக்கும் இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?
Ilaiyaraja Nasar: தமிழ் சினிமாவில் இசையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. 70 காலகட்டத்தில் இருந்து இன்றைய தலைமுறை வரை இளையராஜாவின் இசையில்தான் இன்னும் ரசிகர்கள் பயணித்து வருகின்றனர். இளையராஜா இசையை கேட்காதவர் என யாரும் இருக்க மாட்டார்கள்.அந்தளவுக்கு மாபெரும் சாதனையை படைத்தவர் இளையராஜா.
சமீப காலமாக இளையராஜாவை பற்றிய பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நான் என் வேலையை மட்டுமே பார்த்து வருகிறேன், யாரை பற்றியும் கவலை கொள்வதில்லை என சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்தார் இளையராஜா. இருந்தாலும் பாலசந்தர், பாரதிராஜா, வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் இளையராஜாவுக்கு சில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
இதையும் படிங்க: அதான உழைச்சி சம்பாதிச்சா கையில நிக்கும்… மனோஜுக்கு தொடங்கிய கெட்ட காலம்…
அதிலும் தன் அனுமதி இல்லாமல் தன் பாடலை யாரும் பயன்படுத்தக் கூடாது என காப்புரிமை கேட்டு சமீபகாலமாக இளையராஜா தயாரிப்பு நிறுவனங்கள் மீது வரிசையாக புகார் கொடுத்து வருகிறார். இது ஒரு விதத்தில் ரசிகர்கள் மனதில் அவரின் மரியாதை கெடும் படியாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் நாசர் திடீரென இளையராஜாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது நாசர் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவதாரம்’. அந்தப் படத்தில் ‘தென்றல் வந்து தீண்டும் போது’ என்ற பாடல் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: பிக்கப் ஆகாத பிடி சார்!.. 10 கோடி பட்ஜெட்டுக்கு பட்டை நாமம்!.. முதல் வார வசூல் இவ்ளோதானா?..
முதலில் இந்தப் பாடலுக்காக இளையராஜா போட்ட டியூன் நாசருக்கு பிடிக்கவில்லையாம். அதன் பின் அந்த பாடலை ரெக்கார்டிங் தியேட்டரில் போட்டு பார்க்கும் போது கதறி அழுது விட்டாராம் நாசர். நேராக இளையராஜாவிடம் போய் என்னை மனித்துவிடுங்கள் சார் என காலில் விழுந்து விட்டாராம் நாசர். அந்தளவுக்கு அந்த பாடல் நாசரை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதற்கு ஏற்ப ரசிகர்கள் மனதிலும் அந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.