உயிரை கொடுத்து நடித்த நாசர்… ரிஜெக்ட் செய்த பானுமதி… ஏன் தெரியுமா?

Nassar
நாசர் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராக வலம் வருகிறார். எந்த கதாப்பாத்திரத்திலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகராக திகழ்ந்து வருகிறார். நாசர் தனது இளம் வயதில் இருந்தே உலக சினிமாக்களின் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.
ஆதலால் பல வெளிநாட்டு திரைப்படங்களை தேடி தேடி சென்று பார்ப்பாராம். அவரது சினிமா ரசனையே மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கிறது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னை ஃபிலிம் சேம்பரில் நடிப்பு பயின்றார். அதனை தொடர்ந்து தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டிலும் நடிப்பு பயின்றார்.

Nassar
இதனை தொடர்ந்து நாசர், பாலச்சந்தரின் “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்புத் திறமையையும் தாண்டி இவரது மூக்கு பாலச்சந்தருக்கு பிடித்துப்போனதாகவும் ஆதலால் இவருக்கு தனது திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கினார் எனவும் கூறுவார்கள்.
நாசர் ஃபிலிம் சேம்பரில் நடிப்பு பயின்ற பிறகு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தாராம். அதன் படி தரமணி இன்ஸ்டிட்யூட்டிலும் சேர முயன்றிருக்கிறார் நாசர். முன்பெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் 10 நபர்களையே சேர்த்துக்கொள்வார்கள். அதுவும் பல நேர்காணல்கள் வைத்துதான் பத்து பேரையும் தேர்வு செய்வார்கள். நாசர் தரமணி இன்ஸ்டிட்யூட்டில் சேர முயற்சி செய்த காலகட்டத்தில் அங்கே ப.நீலகண்டன், புட்டண்ண கனகல், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நடிகை பானுமதி போன்றோர் நேர்காணல் எடுப்பவர்களாக இருந்தார்களாம்.

Nassar
இந்த நிலையில் நாசரை நேர்காணல் எடுக்கும்போது அவரை நடித்துக் காட்ட சொல்லியிருக்கிறார்கள். நாசர் பல விதங்களில் உயிரை கொடுத்து நடித்து காட்டினாராம். ஆனால் அவரை ரிஜக்ட் செய்திருக்கிறார்கள். ஏன்? என கேட்டபோது, “ஏற்கனவே பிலிம் சேம்பரில் படித்திருக்கிறாய். அப்படி இருக்கும்போது ஏன் இங்கயும் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறாய்?” என கேட்டிருக்கின்றனர். அதற்கு நாசர், “இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறினாராம். எனினும் அதன் பின் நாசர் தரமணி இன்ஸ்டிட்யூட்டில் இணைந்து படித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரிடம் வாலாட்டிய கமல் பட இயக்குனர் – தூக்கி உள்ள வைத்த கலைஞர்