நயன்தாராவை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… அவர் படத்துக்கு இந்த நிலைமையா?

by Akhilan |
நயன்தாராவை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… அவர் படத்துக்கு இந்த நிலைமையா?
X

nayan dhanush

Nayanthara: நடிகை நயன்தாரா நேற்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து அவருக்கு எதிராக ரசிகர்கள் பொங்கி வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்களும் களம் இறங்கி இருப்பது ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

நடிகை நயன்தாரா தன்னுடைய கல்யாணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பெரிய தொகைக்கு விலை பேசி இருந்தார். ஆனாலும் இவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்தும் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்துவந்தது.

இதையும் படிங்க: நயன்தாரா திடீர் அறிக்கைக்கு பின்னால் இப்படி ஒரு திட்டமா? ஓ இதான் விஷயமா?

திடீரென சமீபமாக நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடைல் என்ற பெயரில் வரும் நவம்பர் 18ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பலர் இது குறித்து பேசியும் போதிய புரோமோஷன் இல்லாமல் போக நயன் எடுத்து புதிய ஸ்கெட்சுதான் இந்த திடீர் அறிக்கை எனக் கூறப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவனும் தன் பங்குக்கு தனுஷ் அனுப்பிய நோட்டீஸை இணையத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் உங்கள் கணவர் செய்வது சரியா? என்னுடைய எல்ஐசி படத்தின் தலைப்பை கொடுக்க முடியாது எனக் கூறியும், உங்கள் கணவர் என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுக்கு கடவுள் மன்றத்தில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

இதையும் படிங்க: தனுஷை திட்டி போட்ட பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்!. பயந்துட்டியா குமாரு!..

சொந்த தயாரிப்பாளருக்கே இந்த நிலைமை. அவர் படத்தோட தீம் மியூசிக்கையே கொடுக்க மாட்ராங்க. இவங்க கல்யாணத்துக்கு கேட்டு சண்டை போடுறது எப்படி நியாமாகும் என ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story