கடகடவென வளரும் நயன்தாரா மகன்கள்!.. விக்னேஷ் சிவன் முகஜாடை அப்படியே இருக்கே!..

Published on: March 26, 2024
---Advertisement---

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியின் ட்வின்ஸ் குழந்தைகள் வேக வேகமாக வளர்ந்து வருகின்றனர். சமீபத்தில் குழந்தைகளுடன் குடும்பமாக டூர் சென்ற போட்டோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக சினிமா பிரபலங்கள் பலர் சூழ மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நடைபெற்றது. ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான், அட்லீ, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, அனிருத் உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!

நயன்தாரா திருமணத்தில் முன்னணி நடிகைகள் பெரிதாக யாருமே பங்கேற்கவில்லை. அவரது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நயன்தாராவுக்கு அதற்குள் ட்வின்ஸ் பிறந்ததாக வந்த அறிவிப்பு ரசிகர்களை மட்டுமின்றி நெட்பிளிக்ஸையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்ற நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே ரெஜிஸ்டர் திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டு அந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் காரணமாக திருமண வீடியோ இன்னமும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்திலிருந்து இவ்வளவு நடிகர்களா?!.. அட லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே!..

அன்னபூரணி படமும் வெளியான கொஞ்ச நாட்களிலேயே ராமரை நயன்தாரா அவமதித்து விட்டார் என பஞ்சாயத்தை கிளப்பி நீக்கி விட்டனர்.

நயன்தாராவின் இரு மகன்களான உயிர் மற்றும் உலகம் அப்படியே அப்பா விக்னேஷ் சிவன் ஜாடையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் குட்டி விக்னேஷ் சிவன்கள் வந்து விட்டார்களே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.