தனுஷுக்கு எதிராக கிளவர் ப்ளான்.. ரியல் நீலாம்பரியாக மாறிய நயன்தாரா

dhanush 1
நேற்று சோசியல் மீடியாவில் பெரும் பேசு பொருளாக பார்க்கப்பட்டது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் நயன்தாராவும் தனுஷும் நேருக்கு நேர் சந்தித்து க்கொண்டதுதான். அந்த புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. இதற்குப் பின்னணியில் நயன்தாராவின் மாஸ்டர் பிளானும் இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் வெளியாகிறது .
ஏற்கனவே நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே நானும் ரௌடி தான் படம் சம்பந்தமான பிரச்சினை போய்க்கொண்டிருக்க இந்த திருமணத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பேசுவார்களா மாட்டார்களா? ஒருவருக்கொருவர் பார்த்த பிறகு இருவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.
இதையும் படிங்க: மாநாட்டுல விஜய் பேசியதைப் பார்த்து மிரண்டுட்டேன்… எஸ்ஏ.சந்திரசேகரா இப்படி சொல்றாரு?
ஆனால் படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக நீலாம்பரி எப்படி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாரோ அப்படி ஒரு தோரணையில் தனுசுக்கு அருகில் போடப்பட்ட ஒரு சோஃபாவில் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருந்தார் நயன்தாரா .ஆனால் அப்படி அவருக்கு பக்கத்தில் சோஃபாவை போடச் சொன்னது நயன்தாரா தான் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
ஆகாஷ் பாஸ்கர் தனுஷ் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அதனால் இருவரும் திருமணத்திற்கு வருவார்கள் என அனைவரும் எதிர்பார்த்ததுதான். முதலில் தனுஷ் வந்து உட்கார்ந்திருக்க அவருக்கு எதிராக சோஃபா நயன்தாராவிற்காக போடப்பட்டதாம். ஆனால் நயன்தாரா சிவகார்த்திகேயன் ஆர்த்தி அமர்ந்திருப்பதை பார்த்ததும் அங்கு போய் அமர்ந்து கொண்டாராம்.

nayan
அதன் பிறகு அங்கிருந்தவர்களை அழைத்து தனுசுக்கு அருகில் ஒரு சோஃபாவை போடச் சொல்லி வேண்டுமென்றே அங்கு போய் அமர்ந்திருக்கிறார் நயன்தாரா. அது மட்டுமல்ல இவர்கள் இருவரும் அமர்ந்து இருந்த அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த புகைப்படத்தை எடுக்கச் சொல்லி வைரலாக்கச் சொன்னதும் நயன்தாரா தான் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கோட் மொத்த வசூலை 23 நாளில் காலி செய்த அமரன்.. இன்னும் இருக்கு? இத பாருங்க!..
தன்னுடன் வந்தவர்களை நயன்தாரா தான் புகைப்படம் எடுக்க சொன்னாராம். அதை சமூக வலைதளங்களில் பரப்ப சொன்னதும் நயன்தாரா தான் என தெரிகிறது. இந்த செய்தியை அறிந்ததும் நெட்டிசன்கள் ஒரு வேளை அவருடைய ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான ஒரு ப்ளானாக இருக்கலாமோ என கிண்டலடித்து வருகின்றனர்.