நயனுக்கு அதிகரித்த பணத்தாசை… ப்ரமோட் தான் பண்ணல… ஃபாலோ கூடயா பண்ணாம இருப்பீங்க!
Nayan Insta: தமிழ்சினிமாவில் தாங்கள் நடித்த படத்துக்கு ப்ரோமோட் செய்வது ஒரு சிலரின் பழக்கம் என்றால் ஒரு சில முன்னணி பிரபலங்கள் படம் நடிப்போம். எந்தவித விழாவுக்கெல்லாம் வர முடியாது என்பதில் முடிவாக இருக்கின்றனர். இந்த இரண்டு விதங்களில் நயனை எதிலுமே சேர்க்க முடியாது.
தன்னுடைய படம் என்றால் முதல் ஆளாக நிற்பவர். மற்ற ப்ரோடக்ஷன் படங்களுக்கு போகவே மாட்டார். அதை மாதிரி ஜவான் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அட்லீ பேசும்போது நயன் ஓணத்துக்கு கேரளா சென்றதாக கூறினார். என்னமோ அமெரிக்கா மாதிரி சொல்றாரே என பலரும் கிண்டல் அடித்தனர்.
இதையும் படிங்க: கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?
ஆனால் ஷாருக்கானுடன் திருப்பதியில் ஜவான் வெற்றிக்காக சாமி வழிபாடுக்கு சென்றார். இதில் தமிழ் திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது. ஜவான் இன்று ரிலீஸாகி இருக்கிறது. இந்த படத்திற்கு நயன் மிகப்பெரிய தொகையை வாங்கி கொண்டு இன்ஸ்டாவில் ப்ரோமோட் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த மாத இறுதியில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த இறைவன் திரைப்படத்தின் ஒரு படத்தினை கூட தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிடவில்லை. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது கூட நயன் அதை தன்னுடைய இன்ஸ்டாவில் ரிலீஸ் செய்யவில்லை. காசு கொடுத்தா செய்வேன் என்ற ரீதியில் தவிர்த்துவிட்டதாக சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!
இறைவன் குழுவில் இருந்து யாரையும் நயன் ஃபாலோ செய்யவில்லை. ஜெயம் ரவியை கூட ஃபாலோ செய்யவில்லை. காசுக்காக இப்டியா பண்ணுவீங்க என்ற ரீதியில் பலரும் கமெண்ட்களை வரிசையாக தட்டி வருகின்றனர். அடுத்தடுத்த படங்களுக்கு என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.