அந்த நடிகை மாதிரி என்னைக்காவது நடிச்சிருக்கீங்களா? அப்புறம் எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்

by Rohini |   ( Updated:2024-11-19 08:58:38  )
nayan
X

nayan

தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். விஜய், அஜித் ,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் .

ஆரம்ப காலங்களில் சிம்புவுடன் காதல், பிரபுதேவா உடனான காதல் என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாகி அதன் பிறகு அவருடைய ட்ராக்கையே மாற்றினார் நயன்தாரா .சொல்லப்போனால் அந்த பிரச்சனைகளுக்கு பிறகுதான் அவருக்கு பல நல்ல பட வாய்ப்புகள் வந்தது. அதற்கு காரணமும் அவரே தான். அதை பல பேட்டிகளில் கூறியிருப்பார்.

இதையும் படிங்க: செம உஷாருதான் லோகேஷ்!… எப்படியெல்லாம் பிளான் போடுறாரு பாருங்க?!… கூலி பட அப்டேட்!…

அதாவது ஒரு கட்டத்திற்கு பிறகு தான் நான் சூழ்நிலையை புரிந்து கொண்டேன் என சொல்லி இருந்தார் நயன்தாரா. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம்தான். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அதுவும் பிற மொழிகளிலும் நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது.

இவருடைய ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது என்ற செய்தி வந்ததுமே அனைவரும் இவருடைய மொத்த வாழ்க்கையை பற்றியும் இருக்கும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு அதை பார்த்தவர்கள் புலம்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் அந்த ஆவணப்படத்தில் அனைவருமே ‘நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் புகழ்ந்து வந்தனர்.

இதையும் படிங்க: ஒரு வாய்ப்பும் இல்லன்னாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல!.. ஓவர் ஆட்டம் போடும் விஷால்!…

இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்தை கூறியிருக்கிறார். அதாவது அவருடைய ஆவணப்படத்தில் ஒன்றுமே இல்லை .கல்யாணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும் என்றுதான் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவருடைய திருமண காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வருகின்றது. மற்றபடி அவரைப் பற்றி அனைவரும் புகழ்வது தான் அதில் இடம்பெற்றிருக்கிறது.

saipallavi

#image_title

அது மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் என அதில் பேட்டி கொடுத்த அனைவரும் கூறி வருகின்றனர். கிட்டத்தட்ட தற்புகழ்ச்சிக்கான படம் தான் அது. சாய் பல்லவி போல எந்த படத்தில்யாவது நயன் நடித்திருக்கிறாரா? ஒரு படத்தில் கூட சாய் பல்லவி மாதிரி நயன்தாரா நடித்ததே கிடையாது. அப்புறம் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார்கள் என தெரியவில்லை என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story