அன்னபூரணி விமர்சனம்: வெஜிடேரியன்களை இப்படி வெறியேத்துறாரே நயன்தாரா?.. படம் விளங்குச்சா!..

by Saranya M |
அன்னபூரணி விமர்சனம்: வெஜிடேரியன்களை இப்படி வெறியேத்துறாரே நயன்தாரா?.. படம் விளங்குச்சா!..
X

நடிகை நயன்தாராவின் 75வது படமாக இன்று வெளியாகி உள்ள அன்னபூரணி படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். ராஜா ராணி படத்தில் நடித்த சத்யராஜ், ஜெய் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்திலும் நடித்துள்ளனர்.

மேலும், கே.எஸ். ரவிக்குமார், யாரடி நீ மோகினி படத்தில் நடித்த கார்த்திக் குமார் (சுசித்ரா கணவர்) இனிமே நடிக்கவே மாட்டேன்னு சொன்ன அந்த ஸ்டாண்டப் காமெடியன் தான் இந்த படத்தின் வில்லன், லேபில் வெப்சீரிஸில் ஜெய் உடன் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தி, காந்தாரா வில்லன் அச்யுத் குமார் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணா!.. இனி எப்ப வந்து உதைப்பீங்க!.. தம்பி அழுறேன் வாங்க.. விஜயகாந்துக்காக உருகிய மன்சூர் அலி கான்

நன்றாக படித்து அரசு வேலை கிடைத்தாலும் அதை உதறித் தள்ளி விட்டு கோயிலில் பிரசாதம் செய்யும் வேலையை பார்த்து வரும் அய்யாங்காராக அச்யுத் குமார் நடித்துள்ளார். அவரது மகளானா அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாரா பிரபல செஃப் மாஸ்டர் சத்யராஜ் போலவே மாற வேண்டும் என எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் பிரகாஷ் ராஜை ஜெயம் ரவி ரோல் மாடலாக கொண்டிருப்பது போல கொண்டிருக்கிறார்.

பெரிய செஃப் ஆக வேண்டும் என்றால் அசைவம் சமைத்தால் தான் ஆக முடியும் என்கிற எண்ணத்திற்கு வரும் நயன்தாரா அதற்கான அனுமதி தனது வீட்டில் கிடைக்காத நிலையில், எம்பிஏ படிக்கிறேன் என பொய் சொல்லி விட்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்து திருட்டுத்தனமாக படிக்கிறார். அங்கே இஸ்லாமியரான ஜெய் மதத்துக்கும் உணவுக்கும் சம்பந்தமில்லை என நயன்தாராவுக்கு ரூட் விடுகிறார்.

இதையும் படிங்க: ஜோவிகாவை காப்பாற்றிய வனிதா விஜயகுமார்?.. அப்போ இந்த வார பலியாடு அந்த போட்டியாளர் தானாம்!..

ஹீரோவுக்கு சப்போர்ட்டாக ஹீரோயின் டம்மி பீஸாக நடிப்பதை போல, இந்த படத்தில் டம்மி ஹீரோவாக நயன்தாரா ஜெய்யை தேர்வு செய்துள்ளார். கடைசி வரைக்கும் ஜெய்க்கு பெரிய ஸ்கோப் இல்லை. இருந்தால் அவர் ஹீரோவாகிடுவாரே.. சமையல் போட்டியில் வென்று நயன்தாரா மாஸ்டர் செஃப் ஆனாரா? இல்லையா? என்பது தான் அன்னபூரணி படத்தின் கதை. ஆனால், அதை எந்தளவுக்கு சொதப்ப முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பி எடுத்திருக்கிறார் நிலேஷ் கிருஷ்ணா.

அன்னபூரணி - ஹாஃப் பாயில்!
ரேட்டிங் - 2.5/5.

Next Story