KH234-வில் மேலும் 2 நடிகர்கள்!.. லியோவுக்கே டஃப் கொடுக்கும் மணிரத்னம்... பெரிய சம்பவமே இருக்கு!..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். மிகவும் குறைந்த படங்களை இயக்கினாலும் எப்போதும் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கிறார். இவர் இயக்கிய மௌன ராகம், நாயகன், ரோஜா, தளபதி, பம்பாய், இருவர் ஆகிய படங்கள் இப்போதும் பலராலும் சிலாகித்து பேசப்பட்டு வருகிறது.
பல வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து இரண்டு பாகங்களாக அவர் இயக்கியிருந்தார். முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: வீலிங் செஞ்சதால அவன் விழல… தெரியாம பேசாதீங்க… தலையில் பெரிய அடி!… டிடிஎஃப் வாசனின் நண்பர் சொன்ன ஷாக்!
இப்போது தனது அடுத்த படத்திற்கு மணிரத்னம் தயாராகி வருகிறார். அதிலும் நாயகன் படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படமும் மணிரத்தினத்தின் முந்தய படங்கள் போல ஒரு மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. சிம்புவை நடிக்க வைக்க முயற்சி நடந்து அவர் நடிக்க முடியாமல் போல துல்கர் சல்மான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் திரிஷா நடிப்பதும் உறுதியாகியுள்ளது. எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒத்த சொல்லுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த படக்குழு… கறார் காட்டிய மணிரத்னம்…
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் நாசர் மற்றும் மன்சூர் அலிகான் என இருவரும் நடிக்கவுள்ளனராம். மேலும், கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி இப்படம் பற்றி செய்தி ஃபர்ஸ்ட் லுக்காக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், கமல் ஹெச். வினோத் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
எனவே, ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் கமல் நடிப்பாரா? இல்லை ஒவ்வொரு படமாக நடிப்பாரா?. எந்த படம் முதலில் துவங்கும்? போன்ற தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன. ஆனால், கமல்ஹாசன் அதிக படங்களில் நடிக்க துவங்கியிருப்பது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய விருது ஒன்னும் சும்மா வாங்கல! அமீர் செஞ்ச வேலை – பிரியாமணி வாழ்க்கைல இப்படியெல்லாம் நடந்துருக்கா?