நீங்க மட்டும் போவீங்களா.. நானும் போவேன்.. ரஜினிகாந்த் டைரக்டரின் சூப்பர் எண்ட்ரி!...

by Akhilan |   ( Updated:2024-08-11 08:50:50  )
நீங்க மட்டும் போவீங்களா.. நானும் போவேன்.. ரஜினிகாந்த் டைரக்டரின் சூப்பர் எண்ட்ரி!...
X

Nelson: ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர்ஹிட் படத்தினை கொடுத்த ஜெயிலர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தன்னுடைய பாலிவுட் அவதாரம் குறித்து பேசி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் அவசர அவசரமான நடந்த ஷூட்டிங்கால் அப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை குறித்தது.

இதையும் படிங்க: வாழ்க்கை ஒரு வட்டம்டா!.. மறுபடியும் வருவேன்!.. விஜய் வசனம் பேசி அதிர வைத்த பிரசாந்த்!…

இதை தொடர்ந்து அவர் மீது இருந்த நம்பிக்கையால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்கள் தயாரிப்பில் அடுத்து உருவாக இருந்த ஜெயிலர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தனர். விஜயிடம் இழந்ததை ரஜினியிடம் கைப்பற்றினர். சூப்பர் ஸ்டாரின் சினிமா காரியரில் பல வருடம் கழித்து ஜெயிலரை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ஹுக்கும் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அஜித் நடிக்க வேண்டிய கதாபாத்திரமா அது? எவ்ளோ பெரிய விஷயம்? சாதாரணமா சொல்றாரே

ஆனால் அவரின் கால்ஷூட் பிரச்னையால் நயன்தாரா நடித்த கேரக்டரில் ஜான்வி கபூரை வைத்து இயக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கூலி படத்தினை முடித்துவிட்டு வருவதற்குள் நெல்சன் இப்படத்தில் இணையலாமாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Next Story