ஷூட்டிங் தான் போறீங்களா? ஊரசுத்தி பாக்க போறீங்களா.?! நெல்சன் என்ன செய்துள்ளார் தெரியுமா.?!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்து, அடுத்து சிவகார்திகேயனை வைத்து டாக்டர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, அதற்கடுத்து, தளபதி விஜயை வைத்து பீஸ்ட் எனும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் நெல்சன்.
அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 169வது திரைப்படத்தை இயக்க நெல்சன் கமிட் ஆகியுள்ளார். ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு பீஸ்ட் அடுத்த அப்டேட் என்ன, தலைவர் 169-இன் புதிய அப்டேட் என்ன.? என்பதுதான்.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் வெளிநாட்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கடுத்து தான் பீஸ்ட் ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு எடுத்தனர். அதன் பிறகு இங்கே முழு படத்தையும் செட் போட்டு முடித்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் - கமல் மகளுக்கு அந்த ஏரியாவில் டிமாண்ட் அதிகம் போல.! ஹே என்கூட ஒரு தடவை.!
அதே போல, ரஜினி படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங்கையும் நெல்சன் வெளிநாட்டில் தான் நடத்த உள்ளாராம். தற்போது அதற்கான வேலைகள் தான் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அங்கு முடித்த பிறகு தான் இந்தியாவில் இப்பட ஷூட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரசிகர்கள் முதல் இரண்டு படம் சிறிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்பதை அடுத்தடுத்த படங்களின் மூலம் நெல்சன் நிறைவேற்றி ஊர் சுற்ற போகிறாரா என கேட்டு வருகின்றனர்.