நெல்சனுக்கு ஏன் இந்த விபரீத ஆசை! எல்லாம் ‘ஜெயிலர்’ வெற்றிதானா? கொஞ்சம் பாத்து பண்ணுங்க பாஸ்

nelso
Nelson: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் நெல்சன். சின்னத்திரையில் பணியாற்றிக் கொண்டிருந்தவரை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தியவர் நடிகர் சிம்பு. வல்லவன் படத்தில் நெல்சன் உதவிய இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
அதன் பிறகு சிம்புவை வைத்து வேட்டையன் என்ற படத்தை ஆரம்பித்த நெல்சன் அந்தப் படம் பாதியிலேயே விடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கே சென்றவர் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனின் திருட்டுத்தனத்தை கண்டுப்பிடித்த பாக்கியா… செம பல்ப் வாங்கிய கோபி..!
அதனை அடுத்த கோலமாவு கோகிலா என்ற படம் நெல்சனை இந்த தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. எடுத்த முதல் படத்திலேயே இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் வரவழைத்தது.
முதல் படத்தின் வெற்றியோடு தனது இரண்டாம் அடியை எடுத்து வைத்தார் நெல்சன். டாக்டர் என்ற டார்க் காமெடி படத்தை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். எடுத்த இரண்டு படங்களின் வெற்றி நெல்சனை உச்சத்தில் நிற்க வைத்தது.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: விஜயாவை கழுவி ஊற்றிய அண்ணாமலை நண்பர்… முத்துவிடம் சிக்கிய மனோஜ்…
இதே வெற்றியோடு விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்தார். ஆனால் அந்தப் படம் விமர்சன ரீதியில் பல பேரின் கிண்டலுக்கு ஆளானது. மீம்ஸ்களை போட்டு நெல்சனை வாழ்க்கையையே வீணடிக்கப் பார்த்தனர்.
ஆனால் இன்னொரு வாய்ப்பு கொடுப்போம் என்று சன்பிக்சர்ஸ் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுக்க அடி பட்ட பாம்பு சும்மா விடாது என்பதை போல வெறித்தனமான வெற்றியை கொடுத்து நெல்சனை இந்த உலகமே கொண்டாடும் படி செய்தது.
இதையும் படிங்க: கழுத குடிசையா இருந்தாலும் பரவாயில்லை!.. சந்திரமுகி 2வை காணும் மக்கள்.. 2வது நாள் இவ்ளோ வசூலா?..
இந்த வெற்றியால் மீண்டும் ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கே கொடுத்திருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம். அது கண்டிப்பாக ஜெயிலர் 2 வாகத்தான் இருக்கப் போகிறது என்றும் அதற்கு முன் நெல்சன் எந்தப் படங்களையும் இயக்கப் போவதாக இல்லை என்றும் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். ஆனால் ஜெயிலர் 2 படத்திற்கு முன் நெல்சன் ஒரு சில படங்களை தயாரிக்கப் போவதாகவும் சித்ரால் லட்சுமணன் கூறினார்.