என்னங்கடா கங்குவான்னு சொல்லிட்டு பாகுபலியை ரீமேக் பண்ணி வச்சிருக்கீங்க!.. ரசிகர்கள் ட்ரோல்!..
Gangua trailer: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருப்பில் மிகவும் அதிக பொருட்செலவில் ஹாலிவுட் பாணியில் சரித்திர படமாக கங்குவா உருவாகியுள்ளது.
ஜெய் பீம், சூரரரைப்போற்று ஆகிய படங்களில் சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த வரிசையில் கங்குவா திரைப்படமும் சூர்யாவின் திரைவாழ்வில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கடந்த 2 வருடங்களாக சூர்யாவின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
2 வருடங்களாக தனது மொத்த உழைப்பையும் சூர்யா கங்குவா படத்தில் போட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பத்தானியும், டெரர் வில்லனாக ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார்.
வருகிற அக்டோபர் 10ம் தேதி கங்குவா படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதில், ரத்தம் சொட்டும் போர்ச்சண்டை காட்சிகளும், சூர்யாவின் மாஸ் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.
அதேநேரம், சூர்யாவை பிடிக்காத சில ரசிகர்கள் இப்படத்தின் டிரெய்லரை ட்ரோல் செய்யவும் துவங்கி இருக்கிறார்கள். கங்குவா டிரெய்லரில் இடம் பெற்ற சில காட்சிகளை பாகுபலி படத்தின் காட்சிகளோடு ஒப்பிட்டு ‘என்னங்கடா கங்குவான்னு சொல்லிட்டு பாகுபலியை ரீமேக் பண்ணி வச்சிருக்கிங்க’ என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.
என்னதான் சிலர் ட்ரோல் செய்தாலும் கங்குவா திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2 பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.