கோட் எந்த ஹாலிவுட் படம்?!... மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. ட்ரோலில் வெங்கட்பிரபு!..
Goat movie: மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து தமிழில் படமாக எடுப்பது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் விஜய் வரை இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், வேற்று மொழி படங்களை எல்லோரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இது பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
டிவிடி இல்லையெனில் இங்கே தமிழ் சினிமாவே இல்லை என ஒரு படத்தில் பிரகாஷ்ராஜ் வசனம் பேசுவார். அப்படித்தான் இப்போதும் பல படங்கள் வருகிறது. ஹாலிவுட்டில் வெளியாகி எல்லோராலும் ஒரு படம் சிலாகிக்கப்பட்டால் உடனே அந்த கதையையோ அல்லது சில காட்சிகளையோ உருவி காட்சியாக வைத்து விடுவார்கள். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கோட். விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், ஹாலிவுட் பட பாணியில் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் ஒரு விஜயை மிகவும் இளமையாக காட்டியுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஹாலிவுட்டில் ஒரே நடிகர் அப்பா - மகன் என ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜெமினி மேன் என்கிற படம் வெளியானது. இதை வைத்து நெட்டிசன்கள் சிலர் கோட் படத்தை ட்ரோல் செய்வதுண்டு. இந்நிலையில்தான், இந்த படம் பற்றி ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
SATS (ஸ்பெஷல் ஆண்ட்டி டெரரிஸ்ட் ஸ்குவார்ட்) என் சொல்வார்கள். RAW அமைப்போடு இணைந்து அவர்கள் வேலை செய்வார்கள். அப்படி வேலை செய்த ஒரு குரூப் பின்னாளில் அதன் மூலம் ஒரு பிரச்சனையை சந்திக்கிறார்கள். அதை எதிர்கொண்டு அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு’ என அவர் சொல்லி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அப்படியே எந்த ஹாலிவுட் படம்னு சொல்லிட்டீங்கன்னா கடைய சாத்திடலாம் என சில ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.