Cinema News
கங்குவாக்காக களமிறங்கிய ஜோதிகா!.. அவரையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள்?!… இப்படி மாட்டிட்டீங்களே!..
கங்குவா திரைப்படத்தின் விமர்சனங்களுக்கு எதிராக ஜோதிகா குரல் கொடுத்த நிலையில் அவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ் உள்ளிட்ட நடித்திருந்தார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கங்குவா வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: Bigg boss Tamil: கன்டென்ட் கிடைக்க விடாமல் செய்யும் விஜய்சேதுபதி… தொடரும் எதிர்ப்புகளை சமாளிப்பாரா?
சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த காரணத்தால் வசூலிலும் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் எந்த திரைப்படத்திற்கும் இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததே கிடையாது. அதற்கு காரணம் படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கொடுத்த பில்டப் தான். மேடைக்கு மேடை படம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் பேசி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தார்கள். ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்ததால் கங்குவா படத்தின் மீது தங்களது கோபத்தை காட்டி வருகிறார்கள்.
கங்குவா படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது பார்க்கப்படுகின்றது. இருப்பினும் தொடர் விமர்சனம் காரணமாக இரண்டாவது நாளில் வசூல் குறைந்து இருக்கின்றது. இரண்டாவது நாளில் மொத்தமாக 89.32 வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.
படம் 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் நம்பி வந்த நிலையில் தற்போது 200 கோடியை தாண்டுவது என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படத்தின் விமர்சனத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘சூர்யாவின் மனைவியாக இதை எழுதவில்லை. ஒரு ரசிகையாக எழுதுகிறேன்.
படத்தின் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே மிகுந்த சத்தமாக இருந்தது. அதற்காக படமே மொத்தமாக நன்றாக இல்லை என்பது போல விமர்சனம் எழுதி வருகிறார்கள். திட்டமிட்டு தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் படத்தின் வேலைப்பாடு, 3டி தொழில்நுட்பம், பெண்கள் சண்டை செய்யும் காட்சிகள் என பல விஷயங்கள் படத்தில் பாராட்டும் விதமாக உள்ளது.
இதையும் படிங்க: வைரலாகும் நாகசைதன்யா- சோபிதா திருமண பத்திரிக்கை?!… இது உண்மைதானா!… ரசிகர்கள் குழப்பம்..!
இது குறித்து யாருமே கருத்து தெரிவிக்கவில்லை என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் இணையவாசிகள் ஜோதிகாவின் பதிவிற்கு மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள். கங்குவா சூர்யாவுக்கு ஆதரவளிக்க போய் நீங்களும் இப்படி மாட்டிக் கொண்டீர்களே ஜோதிகா என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.