Categories: latest news

அஜித் ஹேப்பியாத்தான் இருக்காரு!.. பாவம் அவரை நம்புனவங்க நிலைமைதான் மோசம்.. நெட்டிசன்கள் கலாய்!..

நடிகர் அஜித் தனது பைக் டீமுடன் காட்டுக்கு சென்று சமைத்து சாப்பிட்டு விளையாடும் புகைப்படங்களை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நடிகர் அஜித்தின் பைக் டூர் புகைப்படங்கள் மற்ற்றும் பைக் ஓட்ட சொல்லித் தரும் வீடியோக்கள் என மீண்டும் வைரலாக்கி அஜித்தை பிரமோட் செய்து வருகின்றனர்.

தனக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமா என்ஜாய் பண்ணி வாழ்கிறார் தல என ரசிகர்கள் கமெண்டு போட்டு வரும் நிலையில், அதை எடுத்து போட்டோக்களாக சோசியல் மீடியாவில் வெளியிடுவது அடுத்த படத்திற்காக புரமோஷன் தான் என்றும் மேலும், அவரை நம்பி பணம் போட்ட லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனியின் நிலைமைதான் கவலைக்கிடமாக உள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து விடுகின்றனர்.

இதையும் படிங்க: காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!

விடாமுயற்சி படத்தை அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குமா அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள குட் பேட் அகலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகிறதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஒரு பக்கம் சூர்யா தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குனர்களை தவிர்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் நடிகர் அஜித்குமார் விக்னேஷ் சிவன், மகிழ் திருமேனி உள்ளிட்ட இயக்குநர்களை கஷ்டப்படுத்தி வருகிறார் என்றும் அடுத்த பலியாடு ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் ரோல் சிம்பு பண்ணினா எப்படி இருக்கும்?.. இப்பவே போட்டியை ஆரம்பித்த எஸ்டிஆர் ரசிகர்கள்!

அஜித்தை வைத்து தனது ஸ்டைலில் படம் இயக்க நினைத்த எச். வினோத் கடைசி வரை அஜித் சொன்ன கதைகளைத்தான் படமாக எடுத்து வந்தார் என்றும் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடாமல் போக காரணமே அஜித் தான் என்றும் சொல்கின்றனர்.

ஆனால், அஜித் கொடுத்த கால்ஷீட்டை சரியாக லைகா மற்றும் மகிழ் திருமேனி செய்யாதது தான் மிஸ்டேக் ஆதிக் அதையெல்லாம் சிறப்பா செய்து விடுவார் என அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago