ஜனநாயகன் No ரிலீஸ்!.. பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்கள்!…

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சினைகள் சிக்கியதால் இந்த படம் ரிலீஸாகவில்லை. விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்பட்டது. எனவே அவரை வழியனுப்பும் படமாக ஜனநாயகன் இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினையால் இந்த படத்தை விஜய் ரசிகர்களால் பார்க்க முடியாமல் போயிருக்கிறது.

இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் வருகிற 21ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கிறது. எனவே இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகம் படம் வெளியாகும் என தெரிகிறது. எனவே ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியானது. வரிசையாக பொங்கல் விடுமுறை வருவதால் மேலும் சில படங்களை களமிறருக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஜனவரி 14-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல் ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜனவரி 15ம் தேதி வெளியாகிறது. அதோடு விஜய் நடித்து ஏற்கனவே வெளியான தெறி படத்தை ஜனவரி 15ம் தேதி ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். ஜனநாயகன் படம் வெளிவராத நிலையில் தெறி படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என தெரிகிறது.