Cinema News
லோகேஷ் வச்சா ஒன்னு… மூணை காட்டி மொத்தமாக சுருட்டிய ஆதிக்… என்னங்க பாஸ் இப்படி இறங்கிட்டீங்க?
Aadhik: தமிழ் சினிமாவில் இயக்குனர் ஒரு ட்ரெண்ட்டை கிளிக் ஆகிவிட்டால் அடுத்து வரும் எல்லா இயக்குனர்களும் கண்ணை மூடிக்கொண்டு அவரையே ஃபாலோ செய்வார்கள். பேய் கதையில் தொடங்கி மல்டி ஸ்டார் கதைக்களம் எல்லாமே ஒருத்தரை வைத்து ஒருத்தர் எடுத்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் மற்ற படத்தின் சாயலே வராமல் இயக்க வேண்டும் என நினைப்பார். ஆனால் ஒரு டச் இருக்க வேண்டும் என்பதற்காக ரெட்ரோ பாடல்களை தன்னுடைய படத்தில் இடம் பெற செய்வார். கைதி, மாஸ்டர் படங்களை விட விக்ரம் படத்தில் அவர் பயன்படுத்தி வத்திக்குச்சி பலரிடத்தில் பத்திக்கிட்டு என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!
பழைய பீட் பாடல்களை புதிய காட்சிகளுடன் இணைக்கும் போது அது வேற லெவல் வைப்பை கொடுத்ததாக இணையத்தில் பலரும் கமெண்ட் தட்டினர். இந்நிலையில் ஜெய்லர் படத்திலும் வில்லன் கேங்கிற்கு பழைய பாடல்களை நெல்சன் வைத்தாலும் அது ரீச்சை கொடுக்கவே இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் ஆதிக் இதையே கையாண்டு இருப்பார். டைம் ட்ராவல் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் 80ஸ், 90ஸ்களில் நடக்கும் கதைக்களம் என்பதால் நிறைய ஹிட் ரெட்ரோ பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!
வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது, அடியே மனம் நில்லுனா நிக்காதடி, பஞ்சுமிட்டாய் சீலை கட்டி என டாப் ஹிட் பாடல்களை காட்சிகளுடன் பார்க்கும் போது ரசிகர்கள் செம லைக்ஸை தட்டி வருகின்றனர். இதனாலே படத்துக்கும் ரீப்பீட் ஆடியன்ஸ் வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
லோகேஷின் பாணியை சரியாக பிடிச்ச ஆதிக்கை பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்துக்கே குருவான லோகேஷ் தன்னுடைய லியோ படத்தில் எந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார் என தற்போது ஒரு புதிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.