50 கோடிக்கு உதயநிதி வீடு வாங்கி கொடுத்தாரா? நீங்க பாத்தீங்களா... சரவெடியான நிவேதா பெத்துராஜ்!...

by Akhilan |
50 கோடிக்கு உதயநிதி வீடு வாங்கி கொடுத்தாரா? நீங்க பாத்தீங்களா... சரவெடியான நிவேதா பெத்துராஜ்!...
X

Nivetha Pethuraj: நடிகை நிவேதா பெத்துராஜுக்கும் அமைச்சரும், நடிகருமான உதயநிதிக்கும் தப்பான உறவு இருப்பதாக பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்து இருந்தார். மேலும் உதயநிதி, அவருக்கு 50 கோடி மதிப்பிலான வீட்டை துபாயில் வாங்கி கொடுத்தார் என்றும் பேசி இருப்பார்.

இந்த செய்தி வைரலான நிலையில் இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு நீண்ட விளக்கத்தினை கொடுத்து இருக்கிறார். அதில் இருந்து, சமீபகாலமாக என் மீது கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருக்கிறது என பரவி வருவது பொய்யான செய்தி. நான் அமைதியாக இருந்த காரணம் அதை பலரும் மனிதாபிமானத்துடன் கையாளுவார்கள் என்பதால் தான்.

இதையும் படிங்க: அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..

பெண் வாழ்க்கையை கெடுக்க நினைக்க மாட்டார்கள். நானும் எனது குடும்பமும் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கிறோம். தப்பான செய்தியை பரப்பும் முன்னர் தயவுசெய்து சில நிமிடம் யோசிக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னுடைய செலவுகளை 16 வயதில் இருந்து நானே பார்த்துக் கொள்கிறேன். நான், என்னுடைய குடும்பத்துடன் துபாயில் 20 வருடமாக வசித்து வருகிறேன்.

திரைப்படத் துறையில் கூட நான் யாரிடம் சென்றும் வாய்ப்பு கேட்டதில்லை. நான் இதுவரை நடித்த 20 படங்களும் என்னை தேடி வந்ததுதான். நடிப்பிலும் சரி பணத்திலும் சரி நான் பேராசை கொண்டவள் இல்லை. என்னை பற்றி பேசிய எந்த ஒரு விஷயமும் சுத்தமாக உண்மையே இல்லை. நாங்கள் 2002ல் இருந்து துபாயில் வாடகை வீட்டில் தான் குடி இருக்கோம். 2013ம் ஆண்டில் இருந்து தான் எனக்கு ரேஸில் ஆர்வம் வந்தது.

இதையும் படிங்க: எந்த நடிகரும் செய்யாத விஷயத்தினை யோசித்து செய்த அஜித்… தல எப்போவும் மாஸ் தானுங்கோ!…

நான் இதை சட்ட ரீதியாக எடுத்து செல்ல விரும்பவில்லை. இன்னமும் பத்திரிக்கை துறையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனிமேலும் என்னை அசிங்கப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். எல்லா பத்திரிக்கையாளரிடமும் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தப்பான செய்தியை பரப்பும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை சோதித்த பின்னரே செய்யுங்கள். எனக்காக நின்றவர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story