அடி மேல் அடி!. ரஜினி படத்தால் வந்த பிரச்சனை!... விடாமுயற்சிக்கு இப்படி ஒரு நிலைமையா?..

by Rohini |
rajini
X

rajini

Vidamuyarchi: இந்த வருடம் எப்படியும் விடாமுயற்சி ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு ட்விஸ்டை வைத்துவிட்டது லைக்கா நிறுவனம். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது.

படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இன்னும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இதர காட்சிகளும் இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் அஜர்பைஜானில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்தது படக்குழு. மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பை வேறொரு இடத்தில் நடத்துவதாகவும் திட்டமிட்டிருந்தது. இதனிடையில் லைக்கா நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே படப்பிடிப்பு மிகவும் தாமதமாகுவதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: தமிழ் சினிமா உலகில் கதைக்கு பஞ்சமா?… வழிகாட்டுகிறது மஞ்சும்மெல் பாய்ஸ்!… பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

இதை பற்றி கோடம்பாக்கத்தில் ஒரு சில பேர் லைக்காவுக்கு பொருளாதார பிரச்சினையா? என அதனை தட்டிக் கழித்தது. ஆனால் இன்று வெளியான செய்தியின் படி உண்மையிலேயே லைக்காவிற்கு பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் இருக்கின்றனவாம். அதுவும் ஒரே நிறுவனம் இரு பெரிய மெகா ஸ்டார்களை வைத்து படம் எடுக்கும் போது கண்டிப்பாக அவர்களால் சமாளிக்க முடியவில்லையாம்.

ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி மறுபக்கம் ரஜினியின் வேட்டையன் திரைப்படம். அதனால் லைக்கா நிறுவனம் இப்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறதாம். ஆரம்பத்தில் இருந்தே விடாமுயற்சி படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் படப்பிடிப்பும் அவ்வப்போது தடைப்பட்டுக் கொண்டே இருப்பதால் விடாமுயற்சி படத்தை அப்படியே சிறிதுகாலம் கிடப்பில் போட்டு விட்டு,

இதையும் படிங்க: பண மழையில் புரள நினைக்கும் சூரி, கவின்! கோடிதான் வேணுனு நினைச்சா இத பண்ணுங்க.. கேட்டு பொழைச்சுக்கோங்க

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை முழு மூச்சுடன் எடுத்துவிடலாம். வேட்டையன் படத்தில் இருந்து வரும் பிசினஸை வைத்து விடாமுயற்சி படத்தை முடித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது அஜித் ரசிகர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என விரைவில் தெரியவரும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி விடாமுயற்சி படத்திற்கு சரியாக பொருந்தக் கூடிய பழமொழியாகும். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். விக்னேஷ் சிவன் விலகியது, ஒளிப்பதிவாளர் விலகியது, கதையில் மாற்றம் என பல பிரச்சினைகளை கடந்து முழுமூச்சுடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கையில் இடையில் பனிப்பொழிவு வேற. இன்னும் என்னெல்லாம் சந்திக்க போகிறதோ இந்தப் படம் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டு போன என்னை ராக்கிங் செய்த ரஜினி!… இப்படிலாமா பேசினாரு சூப்பர்ஸ்டார்…

Next Story