துணிவு படத்தில் அஜித்துக்கு பதில் டூப்பா?...கூலா உண்மையை சொன்ன போனி கபூர்..
அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தில் அதிக அளவில் டூப் பயன்படுத்தப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்து இருக்கிறார் போனி கபூர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் மூன்றாவது திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு முன்னர் உருவான வலிமை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் பெரிய அளவில் போகவில்லை என்பதால் துணிவு படத்தினை கண்டிப்பாக வெற்றியடைய வைக்க படக்குழு மிகப்பெரிய அளவில் பணியாற்றி வருகிறார்கள்.
அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் விரைவில் இந்த படத்தின் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகி மஞ்சு வாரியர் இப்படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் எல்லாம் துவங்கி விட்டது.
இதையும் படிங்க: ரஜினி ஆசைப்படுவது சரியா?..இப்போதாவது ஹிட் அடிக்குமா பாபா?!..என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?..
பல வருடத்திற்கு பின்னர் விஜயுடன் மோதுவதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இப்போதிலிருந்தே வெறியுடன் காத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் துணிவு படத்தில் 80 சதவீதம் டூப் போட்டு தான் அஜித் நடித்தார் என்ற தகவல் ஒன்று வைரலானது. அந்த டூப் நடிகர் இவர் தான் என ஒரு புகைப்படமும் வெளியானது.
ஆனால் படக்குழுவினரும், போனி கபூருமே இந்த தகவலை முற்றிலும் மறுத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க நடித்தது அஜித் மட்டும் தான். டூப்பெல்லாம் போடவில்லை என விளக்கம் அளித்திருக்கின்றனர். அஜித் ரசிகர்களோ இது விஜய் ரசிகர்களின் வேலை தான் என சமூக வலைத்தளங்கள் கமெண்ட்டை தட்டி வருகின்றனர்.