ஒரு வழிக்கு வந்துட்டாங்கே! சூரியும் இல்ல.. சூர்யாவும் இல்ல.. வாடிவாசலில் நின்னு ஆடப்போறது இவர்தான்
Vadivasal Movie: விடுதலை படத்தை முடித்த கையோடு வெற்றிமாறன் தொடங்க இருந்த திரைப்படம் வாடிவாசல். ஆனால் விடுதலை 2, சூர்யாவின் ஹிந்தி ப்ராஜக்ட் மற்றும் கங்குவா படம் போன்ற காரணங்களால் வாடிவாசல் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில் இப்போ வருமா? அல்லது எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் அமீர் இந்தப் படத்தில் நடிப்பதால் அமீருக்கும் சிவக்குமார் குடும்பத்திற்கும் இடையே நடந்த அந்த பிரச்சினையால் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பில்லை என்ற தகவலும் வெளியானது.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..
ஆனால் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி ஒரு உறுதி செய்யப்பட்ட கூட்டணியாக இருந்ததனால் சூர்யா வாடிவாசலில் நடிப்பார் என்று கூறி வந்தார்கள். ஆனால் அதோடு சூர்யாவுக்கு பதில் சூரிதான் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால் சூரி நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவும் வெற்றிமாறனும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அந்த பேச்சு வார்த்தையில் சூர்யாவுக்கு திருப்தி இல்லாததால் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலக வாய்ப்பிருப்பதாகவும் தனுஷ் இந்தப் படத்திற்குள் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘வீரம்’ பாப்பாவா அது? தமிழ் சினிமாவின் அடுத்த ஹீரோயின்.. எப்படி இருக்காங்க பாருங்க
ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியை பற்றி தமிழ் சினிமா அறிந்த ஒன்றுதான். இருவரும் சேர்ந்தால் ப்ளாக் பஸ்டர் ஹிட். அதனால் மீண்டும் அவர்கள் இணைவது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
ஆனால் யார் வந்தால் என்ன? போனால் என்ன? எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்ற மன நிலையில் இருக்கிறார் தாணு. வாடிவாசல் படத்தை தாணுதான் தயாரிக்கிறார். சூர்யா போனாலும் வாடிவாசலில் எப்படியாவது வேறொரு ஹீரோ வரத்தான் போகிறார். இன்னொரு பக்கம் தன்னிடம் வாங்கிய அட்வான்ஸுக்காக சூர்யா கண்டிப்பாக மற்றொரு படத்தில் என் கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கத்தான் போகிறார் என்ற இரட்டை சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான்தான் பூதங்களின் பூதம்… ஜீபூம்பா!.. 60களில் தெறிக்கவிட்ட மாயாஜாலப்படம்!..