எம்ஜிஆர், விஜயகாந்த் செய்யாததை விஜய் செஞ்சிருக்காரு.. ‘கோட்’ படத்தால் புகழ் மேல் புகழ்
Goat Movie: விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ரிலீசான திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் சினேகா பிரபுதேவா பிரசாந்த் மோகன் உட்பட பல நடிகர்கள் நடித்து வெளியான இந்த திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
எதிர்பார்த்ததையும் விட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முன் அவர் நெகட்டிவ் ஷேடில் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் அந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்
ஆனால் கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வில்லன் விஜயாக வரும் ஜீவன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் கோட் திரைப்படத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது கோட் படத்தில் வில்லனாக விஜய் நடித்தது பெரிய விஷயம். அதுவும் ஒரு அரசியல் தலைவராக வந்த பிறகு இமேஜ் பாதிக்கப்படுமே என்று கூட நினைக்காமல் இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஸ்கோப் இருக்கும் என தெரிந்தே துணிந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: யார் வேணா நடிக்கலாம்!.. டயலாக்கை வாந்தி எடுப்பதுதான் நடிப்பா?!.. விளாசிய சிவக்குமார்…
அரசியல் தலைவர் ஆன பிறகு இமேஜ் என்பது மிக மிக முக்கியம். எம்ஜிஆர் அதைத்தான் நினைத்தார். விஜயகாந்த் அதைத்தான் நினைத்தார். ஆனால் விஜய் அதை பெரிதாக நினைக்காமல் இந்த பாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார்.
பொதுவாக பெரிய நடிகர்களை பொருத்தவரைக்கும் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அது மக்கள் மத்தியிலும் பெரிதும் ஈர்க்கப்படும். ரஜினிகாந்த்தும் வில்லனாக நடிக்க ஆசைப்படுவார். அதனால் தான் விஜய் இந்த கதையில் ஜீவன் கதாபாத்திரத்தை கேட்டு அதற்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது என்பதை அறிந்தே தான் துணிந்து நடித்திருக்கிறார். அதை சிறப்பாக செய்திருக்கிறார் என அந்தணன் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜயாக கலக்கியவர் இவர்தான்!.. அட நம்ம இன்ஸ்டாகிராம் பிரபலமா!