பஞ்சாயத்துக்கு ரெடியாகும் பாலா!.. படம் ரீலீஸ் ஆனா சரி!. வணங்கான் போஸ்டர் பாருங்க!..

by Rohini |   ( Updated:2023-09-25 06:01:58  )
bala
X

bala

Vanangan movie poster: இன்று வணங்கான் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் சூர்யாதான் நடிக்க இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே ஏற்பட்ட சில மனக் கசப்புகளால் சூர்யா அந்தப் படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அருண்விஜய் இந்தப் படத்தில் இணைந்தார். இந்தப் படம் பெரும்பாலும் கன்னியாகுமரியில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டிருக்கிறது.

இதையும் படிங்க: சரத் என்னை விடவே மாட்டார்… ஆனால் பிரபு கூட வேற மாதிரி!… சீக்ரெட் சொன்ன அபிராமி!

அந்த போஸ்டரில் அருண்விஜயின் ஒரு கையில் பிள்ளையாரையும் இன்னொரு கையில் பெரியாரையும் சுமந்தவாறு நிற்பது போல் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த பலரும் பாலா இந்தப் படத்தின் மூலம் ஒரு தரமான சம்பவத்தை செய்ய இருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

இன்னும் சிலர் படம் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்க இருக்கின்றது என்றும் கூறிவருகிறார்கள். போஸ்டரை பார்க்கும் போது பகுத்தறிவும் பக்தியும் ஒன்றுதான் என்பதன் அடிப்படையில்தான் பாலா இந்தப் படத்தை எடுத்திருப்பாரோ என்ற சந்தேகமும் எழுகின்றது.

இதையும் படிங்க: அய்யா எப்போ நீங்க ப்ரீ?… தளபதிக்காக வெயிட்டிங்கில் இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்… எதுக்காம்?

பகுத்தறிவு என்றாலே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் பாலாவின் இந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பும் என்றும் சொல்லப்படுகிறது. பெரியாரை பின்பற்றும் சில அமைப்பினர் இருக்கிறார்கள். அதே சமயம் ஆன்மீகம்தான் உயர்ந்தது என்று பின்பற்றும் ஒரு சில அமைப்பினர் இருக்கிறார்கள். இவர்களை எப்படி ஒன்று சேர்க்க முடியும் என்ற அடிப்படையில் கூட பல பிரச்சினைகள் கிளம்ப வாய்ப்பிருக்கிறது.

arun

arun

ஏற்கனவே மாரிசெல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் குறிப்பிட்ட சமூதாயத்தை காப்பாற்றும் நோக்கிலேயே படம் எடுக்கிறார்கள் என்ற சர்ச்சை அவர்கள் மீது இருந்து கொண்டே வருகின்றன. இதில் பாலாவின் இந்த போஸ்டரும் திடீர் பூதாகரமாக கிளம்பும் என்று சொல்லப்படுகிறது. அதை எல்லாம் தாண்டி அருண்விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய லைஃப் டைம் விருதாக கண்டிப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க: இவ்வளவு நடந்தும் கூலா வீடியோ போட்ட ரஹ்மான்!. எங்களுக்குதான் மறக்காதே சார்!… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…

Next Story