எம்ஜிஆருக்காக விட்டுக்கொடுத்த என்எஸ்கே.! அந்தப் படத்தில் அப்படி என்ன விசேஷம்?

1947ம் ஆண்டில் வெளியான ராஜகுமாரி திரைப்படம் தான் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து தொடர்ந்து அவருக்கு திரையுலகில் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து அதே ஆண்டில் பைத்தியக்காரன் என்ற படத்தில் டிஏ.மதுரம். அந்தக் காலத்தில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி என்எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தார். அங்கே இருந்தாலும் அவரது என்ஸ்கே. நாடக மன்றம் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தலைமையில் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த நாடக மன்றத்துக்கு ப.நீலகண்டன் ஒரு நாடகத்தை எழுதிக் கொடுத்தார். […]

nsk, mgr

1947ம் ஆண்டில் வெளியான ராஜகுமாரி திரைப்படம் தான் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து தொடர்ந்து அவருக்கு திரையுலகில் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து அதே ஆண்டில் பைத்தியக்காரன் என்ற படத்தில் டிஏ.மதுரம். அந்தக் காலத்தில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைதாகி என்எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தார். அங்கே இருந்தாலும் அவரது என்ஸ்கே. நாடக மன்றம் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தலைமையில் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த நாடக மன்றத்துக்கு ப.நீலகண்டன் ஒரு நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.

ரத்த சோதனை என்ற பெயரில் அவர் எழுதிக் கொடுத்த நாடகத்தில் சில மாற்றங்கள் செய்து பைத்தியக்காரன் என்ற பெயரில் அரங்கேற்றம் செய்தார் எஸ்.வி.சகஸ்ரநாமம். அந்த நாடகத்துக்க நல்ல வரவேற்பு கிடைக்கவே, அந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் எஸ்.வி.சகஸ்ரநாமம். அந்த நாடகத்திலும் சரி. திரைப்படத்திலும் சரி. கதாநாயகியாக நடித்தது டிஏ.மதுரம். என்எஸ்.கிருஷ்ணனுடன் திருமணம் ஆன பிறகு டிஏ.மதுரம் வேறு எந்த நடிகரோடும் நடித்தது இல்லை.

அதனால் என்எஸ்.கிருஷ்ணனிடம் அனுமதி பெற்று அந்த நாடகத்தில் நடித்தார். பைத்தியக்காரன் நாடகம் திரைப்படமானபோது அதிலும் டிஏ.மதுரம் கதாநாயகியாக நடித்தார். அதுல அவருக்கு ஜோடியாக நடித்தது எம்ஜிஆர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவு அடையும் நேரத்தில் என்எஸ்.கிருஷ்ணன் விடுதலை ஆனார்.

அந்தப் படத்தில் அவருக்காகவே ஒரு பாத்திரம் தயாரானது. அதுல அவரும் நடித்தார். அந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எல்லோரும் காசு, பணத்தைப் பற்றிக் கவலைப்படாம அப்படி ஒரு ஒத்துழைப்பை வழங்கினர். அவர்களை எல்லாம் கௌரவிக்கும் நோக்கத்தில் பைத்தியக்காரன் படத்திற்கு வெற்றிவிழா கொண்டாடும் போது எல்லோருக்கும் பரிசுகள் தந்து உற்சாகப்படுத்தினார்.

தன்னைப் பார்க்க வருபவர்களுக்கே வாரி வாரி வழங்கும் என்எஸ்.கிருஷ்ணன் தனக்காக உழைத்தவர்களை எந்தளவு கவனித்து இருப்பார் என்று எண்ணிப் பாருங்கள். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

CR
ஆசிரியர்

sankaran v

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →