Kanguva: கங்குவா ட்ரெய்லரில் வந்த நம்பர்!… இதுல இப்படி ஒரு நியூமராலஜி இருக்கா?!…

Published on: November 11, 2024
---Advertisement---

கங்குவா படத்தின் டீசரில் சூர்யாவின் கையில் ஒரு நம்பர் எழுதப்பட்டிருக்கும். அது தொடர்பான சுவாரசிய தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

கங்குவா படம்: நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கின்றார்.

இதையும் படிங்க: Ramyapandian: திருமணம் முடிந்த கையோட ஹனிமூன்!… கணவருடன் ரம்யா பாண்டியன் எங்க போயிருக்காங்க தெரியுமா?!..

படத்தின் ரிலீஸ்: மிகப்பெரிய பொருட்களில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது. 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்கின்றார் இயக்குனர் சிறுத்தை சிவா. இதில் முதல் பாகம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படத்தின் ப்ரோமோஷன் :நடிகர் சூர்யா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று படம் தொடர்பாக ப்ரோமோஷன் செய்து வருகின்றார். நேற்று துபாய் சென்று இந்த திரைப்படம் தொடர்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. ஒவ்வொரு இடத்திலும் நடிகர் சூர்யா பேசுவதை கேட்டு இப்படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

1000 கோடி: நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து கங்குவா திரைப்படம் வெளியாக இருப்பதால் இப்படம் இது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கின்றார் நடிகர் சூர்யா. மேலும் இந்த திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்கள்.

படத்தின் டிரைலர்:  நேற்று மாலை படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. 700 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த கதையில் நடிகர் சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா பல மெனக்கடல்களை செய்து இருக்கின்றார் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகின்றது.

நியூமராலஜி: இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். ஒன்று கங்குவா, மற்றொன்று பிரான்சிஸ். இந்த பிரான்சிஸ் கதாபாத்திரம் படத்தில் வரும் அரை மணி நேரம் மட்டுமே வரும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இப்படத்தின் டிரைலரில் நடிகர் சூர்யாவின் கையில் 15397 என்கின்ற எண் இடம் பெற்றிருக்கும்.

இதையும் படிங்க: Vijay Trisha: விஜய் இத மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. அப்பவே சொன்ன திரிஷா! அதுக்கு விஜய் பதில பாருங்க

இதை பார்த்த ரசிகர்கள் இந்த நம்பரை நியூமராலஜிக்கல் படி தேடி அதற்கான அர்த்தத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. இந்த நம்பருக்கு எகிப்தியன் நியூமராலஜிக்கல் படி பிரிச்சுவல் என்று அர்த்தமாம். இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.