Connect with us

Cinema History

தமிழ்த்திரை உலகில் அமுதைப் பொழிந்த நிலவாய் ஜொலித்த நடிகை இவர் தான்…! பாடல்களோ பட்டையைக் கிளப்பும் ரகங்கள்

எத்தனையோ நடிகைகள் தமிழ்த்திரை உலகில் வலம் வந்தாலும் நட்சத்திரங்களாக மின்னக்கூடியவர்கள் ஒரு சிலர் தான். அவர்களில் அமுதைப் பொழிந்த நிலவாக மின்னியவர் தான் நடிகை ஜமுனா. இவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்க்கலாம்.

நீள் வட்ட முகம், மான் போன்ற கண்கள், முத்து போன்ற பற்கள் கொண்ட வசீகர சிரிப்பும் கொண்டவர். ஆந்திராவின் நர்கீஸ் என்று அழைக்கப்பட்டவர் இவர் தான். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பன்மொழித் திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர். கர்நாடக சங்கீதம், நடனம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

அவர் தான் ஜமுனா. நிச்யத்தாம்பூலம் படத்தில் சிவாஜியுடன் பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா என்ற பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இருந்தார். தங்கமலை ரகசியம் படத்தில் அமுதைப் பொழியும் நிலவே பாடலுக்கும் இவர் தான் வருவார். கண்களில் அபிநயம் காட்டும் விதம் அழகோ அழகு. மிஸ்ஸியம்மா படத்தில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்ற பாடலில் இவர் ஆடும் அழகே தனி தான்.

அந்தப் பாடலில் காதல் மன்னன் ஜெமினிகணேசன் கீ போர்டு இசைத்தபடியே அவரது ஆடலை ரசித்துக் கொண்டு இருப்பார். குழந்தையும் தெய்வமும் படத்தில் நான் நன்றி சொல்வேன் பாடலுக்கு வந்து ரசிகர்களின் நெஞ்சை அள்ளுவார்.

1936 ல் கர்நாடகாவின் ஹம்பியில் சீனிவாசராவ், கௌசல்யா தேவி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜனாபாய்.

இவரது தந்தை வணிக வியாபாரி. கரிமஞ்சள் அதிகளவில் விளையும் துகிரில்லா பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஜமுனா பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினார். பள்ளியின் முன்னாள் ஆசிரியர் கொங்கையா பள்ளி நாடகங்களில் நடிக்க வைத்தார்.

jamuna 3

தொடர்ந்து பிரதான நாடகக்குழுக்கள் அவரைத் தங்களது நாடகங்களில் நடிக்க வைக்க அவரது தந்தையிடம் வேண்டுகோள் வைத்தனர். தாயார் கௌசல்யா தேவி கலைஞானம் பெற்றவர். அவரது ஆலோசனையின்பேரில் ஜமுனா நாடகங்களில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார். தாயிடம் சங்கீதக்கலையையும் கற்றுத் தேரந்தார்.

சீர்திருத்த நாடகங்களை சினிமாவாக்கி புரட்சி செய்தவர் மருத்துவர் கரிகாட்டி ராஜாராவ். இவர் சீனிவாச ராவின் நெருங்கிய நண்பர். தனது மாபொம்மி என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். ஜமுனாவின் நடிப்பு அபாரமாக இருந்தது. ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

Jamuna2

1953ல் வெளியான தனது தெலுங்கு படமான பொட்டில்லோவில் அவரை அறிமுகப்படுத்தினார். இதில் ஜமுனா என்ற பெயரில் சுசீலா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி சிறப்பித்தார். இவரது தொடர் படங்களின் வெற்றி ரசிகர்களைக் கவர்ந்தது.

1954ல் ரோகிணி பிக்சர்ஸ் தயாரிக்க ஹனுமந்தராவ் கதை வசனம் எழுத ஒய்.ஆர்.சுவாமி இயக்கிய படம் எடுக்கப்பட்டது. இந்தப்படத்தின் கதை பணத்தினால் உண்டாகும் விளைவுகளை மையமாகக் கொண்டது. அது தான் பணம் படுத்தும் பாடு. என்.டி.ராமாராவ், சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதைப்படி 2ம் நாயகி ஜமுனா. தங்கவேலுவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இதுதான் இவர் அறிமுகமான முதல் தமிழ்ப்படம். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது.

1955ல் மிஸ்ஸியம்மா படத்தில் மீண்டும் தங்கவேலுவுடன் ஜோடி சேர்ந்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்த புகழ் பெற்ற படம் இது. இந்தப் படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை முகமும், வெகுளித்தனமும் நிறைந்தவராக நடித்து தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றார் ஜமுனா.

Thai magalukku kattiya thaali

மக்கள் திலகம் எம்ஜிஆருடன் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, நடிகர் திலகம் சிவாஜியுடன் தங்கமலை ரகசியம், தெனாலிராமன், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன், நிச்சய தாம்பூலம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

Jamuna 4

ஜெமினிகணேசனுடன் கடன் வாங்கிக் கல்யாணம், நல்ல தீர்ப்பு, மனிதன் மாறவில்லை ஆகிய படங்களில் நடித்து தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார். ஜெய்சங்கருடன் குழந்தையும் தெய்வமும், அன்புச்சகோதரர்கள் ஆகிய படங்களில் நடித்தார். ஜிலூரி ரமணா ராவ் என்பவரை 1965ல் கரம் பிடித்தார். இத்தம்பதியினருக்கு வம்சி கிருஷ்ணா என்ற மகனும், சரவந்தி என்ற மகளும் உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top