கில்லிக்கே சல்லியாயிட்டாங்க! இதுல அந்தப் படமா? விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸாகப் போகும் படம்

vijay
Actor Vijay: நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து எப்படியாவது ஒரு படத்தையாவது எடுக்க வேண்டும் என வெங்கட் பிரபு பலமுறை முயற்சி செய்தும் கடைசியில் அது இப்பொழுதுதான் நடந்திருக்கிறது. அதுவும் விஜய் அஜித் சந்தித்துக் கொண்டபோது அஜித் விஜய் இடம் என்னுடைய இயக்குனர் வெங்கட் பிரபு. அவரை வைத்து ஒரு படம் பண்ணலாமே என விஜய் இடம் கேட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது.
ஒருவேளை அஜித் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டுதான் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருப்பாரோ விஜய் என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தன. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள் .
இதையும் படிங்க: 80ஸ் மட்டுமல்லாம 2கே கிட்ஸ்களையும் தட்டிதுக்கிய டி.ராஜேந்தர்… யாருமே அறியாத அந்த சில தகவல்கள்
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இதற்கு முன் வெளியான வாரிசு ,லியோ போன்ற படங்களில் அமைந்த பாடல்களைப் போல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை .இந்த படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக எச் வினோத்திடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை விஜய்க்கு அது பிடித்துப் போனால் அடுத்த படத்தை எச் வினோத் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மோகன் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் வருகிற 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் அந்த நாளில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..
அதற்கு முதல் நாளில் ஒரு ட்விஸ்ட் ஒன்றும் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில் இவருடைய பிறந்தநாளின் முதல் நாள் பகவதி திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். விஜயை முதன்முதலாக ஒரு ஆக்சன் ஹீரோவாக பார்த்த படம் என்றால் அது பகவதி படம்தான். பக்கா கமர்சியல் படமான இந்த படத்திற்கும் ரசிகர்களின் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கும் என்று கருதியே இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.