விஜயகாந்தின் இமேஜை மொத்தமாக மாற்றிய திரைப்படம்!.. அது மட்டும் நடக்கலன்னா!.,.

Published on: January 2, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: மதுரையை சேர்ந்த விஜயராஜுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. சொந்தமான ரைஸ் மில் இருந்தும் அந்த தொழிலை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்பு வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் சந்தித்தார். விதவிதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை வைத்து சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார்.

வாய்ப்பு அவருக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. சென்ற இடமெல்லாம் அவமானம்தான் மிஞ்சியது. ஒருவழியாக இனிக்கும் இளமை என்கிற படத்தில் வாய்ப்பு கிடைக்க, அடுத்த சாட்சி என்கிற படத்திலும் நடித்தார். அந்த படங்களில் அவர் விஜயகாந்தாக மாறியிருந்தார். அந்த படங்களை வைத்து வாய்ப்பு தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் வெற்றிதான் அவருக்கு வாய்புகளை பெற்று தந்தது. ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுக்க நடிக்க முடியாமல் தடுமாறி தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார். ஒருகட்டத்தில் சினிமா புரிந்து, ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என தெரிந்து நடிக்க துவங்கினார்.

vijayakanth

விஜயகாந்த் என்றாலே கோபமான ஒரு இளைஞர் கதாபாத்திரம் என்பதுதான் அவரின் இமேஜாக இருந்தது. எல்லா படங்களிலும் அப்படித்தான் நடித்தார். கடைசிவரைக்கும் கூட அவர் கோபக்கார மனிதராகத்தான் திரைப்படங்களில் நடித்தார். கோபமாக முகத்தை வைத்துகொண்டு வசனம் பேசுவார். அதுவே அவரின் ஸ்டைலாகி போனது. ஆனால், சில படங்களில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அதற்கெல்லாம் விதை போட்டது ஒரு படம்தான்.

இதையும் படிங்க: பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

அதுதான் ‘நானே ராஜா நானே மந்திரி’ திரைப்படம். இந்த படம் காமெடி கலந்த ஒரு ரொமாண்டிக் கதையுடன் வெளிவந்தது. கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் விஜயகாந்த். அதிலும், வேலைக்கு ஆள் எடுக்கும் அந்த இண்டர்வியூ காட்சியில் விஜயகாந்த் அதகளம் செய்திருப்பார். மேலும், எழுத படிக்க தெரியாத ஒரு இன்னசண்டான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

vijayakanth
vijayakanth

இந்த படம்தான் விஜயகாந்தின் Angry young man என்கிற இமேஜை மாற்றியது. பின்னாளின் பல திரைப்படங்களில் அவர் காமெடி காட்சிகள் நடித்ததற்கு விதை போட்டது நானே ராஜா நானே மந்திரி திரைப்படம்தான். விஜயகாந்தை அப்படி மாற்றியது கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்தான். இப்படத்தை பாலு ஆனந்த் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.