லிஸ்ட்டில் இரண்டு இயக்குனர்கள்… ஒரே ஒரு கண்டிஷன் போட்ட தளபதி விஜய்… யாருக்கு அந்த அதிர்ஷ்டம்?...

by Akhilan |
லிஸ்ட்டில் இரண்டு இயக்குனர்கள்… ஒரே ஒரு கண்டிஷன் போட்ட தளபதி விஜய்… யாருக்கு அந்த அதிர்ஷ்டம்?...
X

Thalapathy69: விஜயின் அடுத்த படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தின் இயக்குனர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது நீண்ட பட்டியலில் இருந்து இரண்டே இரண்டு இயக்குனர்களை விஜய் சலித்து வைத்திருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.

பெரும்பாலும் விஜய்யின் ஒரு படம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகிவிடும். ஆனால் கோட் திரைப்படம் இறுதிக் கட்டத்தை பெரும்பாலான அளவு நெருங்கி விட்ட நிலையிலும் தளபதி 69 திரைப்படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் இடம் யார் அந்த 69 ஆவது படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: இது ஃபுல் மீல்ஸ் விருந்து போல!.. டிரிபிள் எக்ஸ் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா!..

அரசியலில் இறங்கி இருக்கும் விஜய் தன்னுடைய அடுத்த படம் எந்த விதத்திலும் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டு இருக்கிறாராம். மேலும் படம் தளபதி 69 ஆக தான் இருக்கும் என்பதால் அது பெரும்பாலும் அரசியல் சார்ந்த படமாகவே இருக்கும் என பலரிடமும் ஒரு எண்ணம் நிலவுகிறது.

இதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இரண்டு இயக்குனர்களை விஜய் இறுதிக் கட்டமாக தீர்வு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பல இயக்குனர்கள் கதை சொல்லி இருந்தாலும் அதில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இருவர் சொன்ன கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: படத்தில் நடிப்பவர்கள் என்ன கொத்தடிமைகளா? தாங்கமுடியாத பாலாவின் அடாவடிகள்.. இவ்ளோ பேரா?

இதனால் இருவரையும் தொடர்ந்து அந்த கதையை மெருகேற்றி வரச் சொல்லி அனுப்பி இருக்கிறாராம். பெரும்பாலும் இருவரிலிருந்து ஒருவர்தான் தளபதி 69 இயக்குவார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தினை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக இது விஜயின் கடைசி படமாக இருக்காது எனக் கிசுகிசுக்கின்றனர்.

Next Story