கோட் படத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா?!.. இதுதான் காரணமா?!.. உடைக்கும் பிரபலம்!..
நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் கால் பதித்து விட்டதால் அவர் நடித்து வரும் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதன் ஓடிடி உரிமம் யாருக்கு என்பதில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
ஓடிடி தளத்தில் 3 வகையான முறைகளில் படங்களை வாங்குறாங்க. முதலில் டாப் ரேஞ்ச் நடிகர்கள் நடித்த படங்களை வாங்குகிறார்கள். படத்தின் டிரைலர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் அதை வாங்குகிறார்கள். இதற்கு ஹைபிரிட் மாடல் என்று பெயர். சமீபத்தில் வந்த ப்ளூஸ்டார் இந்த ஹைபிரிட் மாடல் தான். அடுத்தது தான் 3வது மாடல். இது ரெவினியு ஷேர். சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை படங்கள் இப்படித்தான் வந்தன.
இதையும் படிங்க... பிடிக்கலனா போங்க! வேற ஹீரோவ வச்சு சக்சஸ் பண்ணி காட்டுறேன்.. கார்த்திக்கிடம் சவால் விட்ட இயக்குனர்!
பார்த்ததும் தான் ரெவினியு ஷேர் கிடைக்கும். பரவலான மக்களுக்குப் பிடித்தமான படங்களா இருந்தால் நல்ல வருமானம் வந்தால் பல விதங்களில் வருமானம் கொடுக்கிறார்கள். பிரிமியம் படம்னா 1 மணி நேரத்துக்கு 6 ரூபாய். 2 மணி நேரம்னா 12 ரூபாய். நெக்ஸ்ட் லெவல் படம்னா 4 ரூபாய். இது எல்லாமே 60 நாள்களுக்குள் வெளியிடணும். இல்லேன்னா அந்த தொகை குறைந்து விடும்.
முதல் வகையில் 15 நடிகர்கள் வர்றாங்க. இவங்க படத்தை மட்டும் தான் ஓடிடி வாங்குவாங்க. இதில் தயாரிப்பாளர் சொல்லும் ரேட் தனக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளும். அவர்களைப் பொருத்தவரை அந்தப் படத்திற்குப் புதிய சப்ஸ்கிரைபர்ஸ் எத்தனை பேர் வர்றாங்கங்கறது தான் முக்கியம். அதற்கு அவங்க ஒரு பென்ச்மார்க் வைத்து இருப்பார்கள்.
அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டால் ஓடிடி தளத்தில் வாங்குவாங்க. அந்த வகையில் கோட் படத்திற்கும் டிமாண்ட் இருக்கு. இவங்க சொல்ற தொகையும், அவங்க கொடுக்குற தொகையும் டேலி ஆகலங்கறது தான் உண்மை. அந்தப் படத்தைப் பொருத்தவரை 2 நிறுவனங்களும் வாங்குவதற்குத் தயாராகத் தான் உள்ளது. அதனால் தான் இன்னும் விற்கப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.