Connect with us

latest news

ஸ்குவிட் கேம் சீசன்2 முதல் சொர்க்கவாசல் வரை… இந்த வார ஓடிடி அப்டேட்ஸ்

OTT Release: தமிழ் ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த சுவாரசிய அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் ரிலீஸ்

ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் நடிப்பில் வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை. இதனால் இப்படம் டிசம்பர் 27ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது.

அதர்வா, அம்மு அபிராமி, சரத்குமார் போலிட்டோ நடிப்பில் வெளியான திரைப்படம் நிறங்கள் மூன்று. திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதால் தற்போது ஆகா ஓடிடியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

கொரியன் வெப் சீரிஸ்

பிரபல கொரியன் வெப்சீரிஸான ஸ்குவிட் கேம் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் சீசன் வெளியிடப்பட இருக்கிறது. டிசம்பர் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

மலையாளம் ரிலீஸ்

நான்கு நண்பர்கள் கொள்ளை அடிக்க வர அங்கு அவர்களின் பழைய கால விஷயங்கள் அவர்கள் மீதான நம்பிக்கையை சோதிக்கிறது. முரா திரைப்படம் பிரைமில் டிசம்பர் 25ல் வெளியாகி இருக்கிறது.

Also Read: விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை நான் ஏன் சரி செய்றேன்னு தெரியுமா? விஜயகாந்தோட பெரிய மனசைப் பாருங்க..!

google news
Continue Reading

More in latest news

To Top