‘பையா’ படம் ரி ரிலீஸ்.. மதிக்காத தமிழ் சினிமா! லிங்குசாமிக்கு இப்படி ஒரு நிலைமையா

by Rohini |   ( Updated:2024-04-01 07:56:46  )
lingusamy
X

lingusamy

Paiya Movie: கார்த்தியின் கெரியரை உயர்த்தி விட்ட திரைப்படமாக அமைந்தது பையா திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு கார்த்தி - தமன்னா ஜோடியை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகளும் அந்த நேரத்தில் பரவியது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து பையா திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்கின்றனர். சமீபகாலமாக தியேட்டர்களில் முன்பு ஹிட் அடித்த படங்களை ரி ரிலீஸ் செய்து அதன் மூலம் திரையரங்கு உரிமையாளர்கள் காசு பார்த்து வருகின்றனர். அதற்கு காரணம் கதை தட்டுப்பாடு என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அந்த வகையில் கமலா திரையரங்கில் பையா திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கைவிட்டுட்டாரு!.. நான் கல்லடி வாங்கினேன்!. புலம்பும் செல்வராகவன்…

அப்போது சமீபத்தில் அந்த திரையரங்கிற்கு வந்த லிங்கு சாமிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு பெரிய நடிகருக்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு லிங்குசாமிக்கு கிடைத்ததாம். இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் கூறிய போது ஒரு நல்ல இயக்குனரை இந்த தமிழ் சினிமா பயன்படுத்த தவறிவிட்டது. பையா படம் இல்லை என்றால் இன்றைக்கு கார்த்தி இல்லை. ஆனால் கார்த்தி லிங்குசாமிக்கு ஏதாவது மறுபடியும் வாய்ப்பு கொடுத்தாரா என்றால் இல்லை.

ஒரு ஜப்பான் படத்தை விடவா மோசமான படத்தை லிங்கு சாமி எடுத்துவிட போகிறார்? கார்த்தி நினைத்தால் கண்டிப்பாக லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதே போல் இன்று லிங்குசாமி பெரும் கடனில் சிக்கி அவருடைய வாழ்க்கையை சரளமாக வாழ முடியவில்லை என்றால் அதற்கு காரணம் கமல்தான் என வலைப்பேச்சு அந்தனன் கூறினார். தயாரிப்பாளராக போகிறேன் என்ற ஆசையில் கமலை மட்டுமே நம்பி ஒரு படத்தை தயாரித்தார் லிங்குசாமி. ஆனால் படம் பெரிய அளவில் அடி வாங்கியது.

இதையும் படிங்க:கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்

அதிலிருந்தே லிங்குசாமி படுத்துவிட்டார். இப்போது கமல் நினைத்தாலும் லிங்குசாமியை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என அந்தனன் கூறினார். ஆனால் மற்றவர்களுக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக ஓடி வருபவர் லிங்குசாமிதானாம். எந்த சூழ்நிலையானாலும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்யக் கூடியவராகத்தான் இருக்கிறார். கௌதம் மேனனே ஒரு பேட்டியில் ‘இந்த சினிமா நமக்கு ஒரு ஆபத்துனா சும்மா போன் போட்டு நலம் விசாரித்தாலே போதும். ஆனால் இங்கு யாரும் அப்படி இல்லை. லிங்குசாமியை தவிற’ என கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட லிங்குசாமியின் நிலைமை இப்பொழுது மிகவும் மோசமாக இருப்பதாக அந்தனன் கூறினார்.

Next Story