Connect with us
K Bhagyaraj

Cinema History

அதுக்குப் பயந்தே அவருக்கு 3 படங்கள் கொடுத்த பாக்கியராஜ்… நடந்தது இதுதான்!..

கதாசிரியரும், வசனகர்த்தாவுமான கலைஞானம் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் குறித்து தனது திரை உலக பயணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

பாக்கியராஜ் எத்தனையோ பேரு கஷ்டப்படும்போது உதவி செஞ்சிருக்காரு. அசிஸ்டண்ட் டைரக்டர், சின்ன சின்ன தயாரிப்பாளர்களுக்குப் பல வழிகளில் உதவியர் பாக்கியராஜ். ஏவிஎம் தவிர அவங்களுக்கு முந்தானை முடிச்சு கொடுத்தாரு. முதன்முதலாக கே. கோபிநாத் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்துக்கு சான்ஸ் கொடுத்தாராம்.

இதையும் படிங்க… ஆனந்தராஜை ஹீரோவாக நினைத்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்… ஆனால் இடையில் புகுந்த மாஸ் ஹீரோ!…

அந்த நன்றிக்கடனுக்காக அவருக்கு 3 படம் எடுத்துக் கொடுத்தாரு பாக்கியராஜ். இல்லேன்னா நன்றி கெட்டவருன்னு திட்டிருவாங்கன்னு பயப்படுவாரு. குருநாதர் டைரக்டர் பாரதிராஜாவுக்கும், பாலகுருவுக்கும் படம் எடுத்துக் கொடுத்தாரு. இவருக்கு சம்பாதிக்கத் தெரியல. ஒரு தோட்டம் வாங்கினாரு. அதுவும் பிற்காலத்துல கடனுக்குப் போயிடுச்சு.

அந்த வகையில் இயக்குனர் பி.மாதவன் கஷ்டப்படுவது பற்றி அவருக்குத் தெரிந்துள்ளது. உடனே உங்களுக்காக ஒரு படம் பண்ணப்போறேன்னு சொன்னாரு. அது என்ன படம்னா.. பொண்ணு பாக்க போறேன். இந்தப் படத்துக்கு பி.மாதவனை இயக்குனரா போடலாமான்னு கேட்டார். நான் அப்படியே ஆச்சரியப்பட்டேன்.

Kalaignanam, Bhagyaraj

Kalaignanam, Bhagyaraj

என்னண்ணே இந்த முழி முழிக்கிறீங்கன்னு கேட்டாரு. உங்களுக்குப் பிடிக்காதான்னு கேட்டாரு. யார் சொன்னது? அவருலாம் நமக்குப் படம் செய்யறாருன்னு சொன்னா அதை விட வேறு பாக்கியம் என்ன வேணும்? அவரு தயாரிச்சு அவரே டைரக்ட் பண்ணின பட்டிக்காடா பட்டணமா, எங்க ஊரு ராஜா, மகேந்திரனின் தங்கப்பதக்கம், வியட்நாம் வீடுன்னு தொடர் வெற்றி கொடுத்தவர் பி.மாதவன்.

இதையும் படிங்க… பாய்ஸ் படத்தில் ஹீரோவாக இருந்த பிரபல இசையமைப்பாளர்…! அந்த காரணத்தால் மிஸ்ஸான வாய்ப்பு!…

ஸ்ரீதரோட அசிஸ்டண்ட் தான் அவர். பார்க்கும்போது அவரோட அண்ணன் மாதிரி இருப்பாரு. ஆனா அவருக்கு கடைசில 2 படம் தோல்வியாயிடுச்சு. அதுதான் அவரு ரொம்ப திணறிக்கிட்டு வந்தாராம். அது பாக்கியராஜ் காதுக்கு வந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1989ல் பிரபு, சீதா, ஜெய்சங்கர் நடித்த படம் பொண்ணு பாக்க போறேன். இந்தப் படத்துக்கு மூல கதை பாக்கியராஜ். இசை அமைத்ததும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஜி.பாலசுந்தரம். படத்துக்கு இயக்குனர் என்.முருகேஷ். இது எப்படி நடந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top