
television
இதனால்தான் அரசியை காதலித்தேன்… உண்மையை சொன்ன குமரவேல்… அதிர்ச்சியான குடும்பம்!
Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இந்த வாரம் அரசியின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
கதிர் மற்றும் செந்தில் வந்து குமரவேலை அடிக்க பழனி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். முத்துவேல் எதற்காக இப்படி செஞ்ச எனக் கேட்க சக்திவேல் நீங்க அவனுக்கு பொண்ணே பார்க்கலை. அதனால்தான் என அவன் எப்படி சொல்வான் என்கிறார்.
அரசியை பிடித்து இருப்பதாக குமரவேல் சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஒரு கட்டத்தில் சக்திவேல் தன்னுடைய மகனுக்கு சப்போர்ட்டாக வாசலில் நின்று பாண்டியனை அசிங்கமாக பேச செல்கிறார். ஆனால் பாண்டியன் கண்ணீர் விட்டு அமர்ந்து இருக்கிறார்.

Pandian stores2
அரசியை பாண்டியன் தூண்டிவிட்டது போல அவர் பேச ராஜி அம்மா, சித்தி அவரை தடுக்கின்றனர். அப்போ வரும் கதிர் மற்றும் செந்தில் அவரிடம் சண்டைக்கு நிற்கின்றனர். ராஜியும் சண்டையை தடுக்க வந்த போது சக்திவேல் அவரையும் பேசுகிறார்.
இதில் கடுப்பான ராஜி, தப்பு இவன் பேரில் தான். நீ இவ்வளோ மோசமா இருப்பேனு நினைக்கலை என திட்டிவிட்டு செல்கிறார். தொடர்ந்து வீட்டிற்குள் வரும் சக்திவேலை முத்துவேல் உனக்கு இந்த விஷயம் முன்னவே தெரியுமா? இதை தெரிஞ்ச போது நீ அதிர்ச்சி அடையலை. கோபப்படலை என்கிறார்.
Also Read: பொசுக்கு பொசுக்குனு சிறகடிக்க ஆசையில் இப்படி ஒரு எபிசோட் உருட்டிடுறாங்க! என்ன ஆச்சு தெரியுமா?
ஒரு கட்டத்தில் குமார் அவங்க நம்ம வீட்டு பொண்ணை இழுத்துட்டு போய் அசிங்கப்படுத்துனாங்க. நம்மளை அதை செய்றதுல என்ன தப்பு எனக் கேட்கிறார். இதில் குடும்பமே அதிர்ச்சியாகி விடுகிறது. முத்துவேல் பொண்ணு விஷயத்துல இப்படி பண்ணாதே எனச் சொல்லி செல்கிறார். அப்பத்தா இனி இப்படி செய்யாதே என சத்யம் கேட்கிறார்.