சம்பளத்தை உயர்த்த பக்கா ப்ளான் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. பதறிப்போய் ஓகே சொன்ன விஜய் டிவி..

by prabhanjani |
pandian
X

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு ஏறாளமான ரசிகர்கள் உள்ளனர். 4 அண்ணன் தம்பிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் 5 ஆண்டுகளாக வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் இப்போதைக்கு முடியாது என்று தெரிகிறு. இந்த சீரியல் முடிந்தாலும், இதில் அடுத்த சீசன் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் 5 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை சுஜிதா, திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அவர்களிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க- பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளர் இவர்தான்..ஓஹோ அதுக்கு தான் வந்தாரா?

தனக்கு கொஞ்சம் தனிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனால் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு சீரியல் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனலட்சுமி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரின் கேரக்டருக்கு ஏற்ற நடிகை கிடைப்பது கஷ்டம். அதோடு 5 ஆண்டுகளாக இவரை அந்த இடத்தில் பொருத்தி பார்த்த மக்களுக்கு மாற்றினால், செட் ஆகாது என்பதை உணர்ந்த சீரியல் குழுவினர், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அடுத்த பார்ட்டில் கூட உங்களுக்கு தான் முக்கிய கதாப்பாத்திரம். இந்த நேரத்தில் நீங்கள் இப்படி விலகினால் அவ்வளவு தான் என்று கூறியுள்ளனர். அதோடு, அவரின் சம்பளத்தையும் ஏற்றி உள்ளனர். அதன் பிறகு அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டும் தொடர்ந்து நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம்.

இது குறித்து சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கையில், 5 வருடங்களாக நடித்து வரும் சுஜிதாவிற்கு, ஒரு முறை கூட சம்பளத்தை ஏற்ற வில்லை. அதனால் தான் அவர் விலகுவதாக கூறினார். சம்பளத்தை உயர்த்தியவுடன் மீண்டும் நடிக்க சம்மதித்து விட்டார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க- ரஜினி, விஜய் கூட செய்யாத உதவியை செய்த விஜய் டிவி பாலா!. இப்படி ஒரு தங்க மனசா!….

Next Story