Parasakthi: பராசக்தி உண்மையான வசூல் இதுதான்!.. வெளியான அறிவிப்பு!…

Published On: January 11, 2026
parasakthi
---Advertisement---

அமரன், மதராஸி ஆகிய திரைப்படங்களுக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் பராசக்தி. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்று சுதாகொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடத்துள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் முதல் முறையாக ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரின் 100வது படமாக பராசக்தி வெளியாகியிருக்கிறது. ஜனநாயகம் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி படம் ஜனவரி 19ம் தேதியும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

எனவே ‘விஜய் படத்தோடு மோதுகிறாயா?’ என விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் திட்டிவந்தனர். ஒருபக்கம் சென்சார் பிரச்சனையில் சிக்கி ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவில்லை. எனவே பராசக்தி படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். ஆனாலும் படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள் ஏனெனில் 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் 11.50 கோடியும் உலக அளவில் 13 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சில இணையதளங்கள் இன்று காலை செய்து வெளியிட்டது. ஆனால் பராசக்தி முதல் நாளில் உலக அளவில் 27 கோடி வசூல் செய்திருப்பதாக இப்படத்தை தயாரித்துள்ள டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.