Parasakthi: டேய் அது துணி எடுக்க போற கூட்டம்டா! ‘பராசக்தி’க்கு இல்லடா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி. படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஹிந்தி திணிப்பை எதிர்த்து எத்தனையோ போராளிகள் பாடுபட்டனர். இப்போதைய இளைஞர்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதனால் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் படமாக பராசக்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவுமே இல்லை. புளூ சட்டை மாறன் சொன்னதை போல வழக்கமான ஒரு ஹீரோ வில்லன் சப்ஜெக்ட்டில் ஹிந்தி என்ற வார்த்தையை அவ்வப்போது பயன்படுத்தியிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது. ஹீரோவாக சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக ரவிமோகனுக்கும் இடையே இருக்கும் மோதலை பற்றிய படமாகத்தான் இது இருந்தது.

முதலில் ஜன நாயகன் பராசக்தி என ஒரு கடும் மோதல் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் பராசக்தி படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டது. சோலோவாக சிவகார்த்திகேயன் ஸ்கோர் பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கூறப்பட்டது. ஆனால் படம் வெளியாகி பாதி பேர் இடைவேளைக்கு பிறகு தியேட்டரை விட்டு வெளியே வந்ததுதான் மிச்சம்.

அந்தளவுக்கு முதல் பாதி படம் மெதுவாகவே நகர்ந்தது. இதற்கிடையில் குரோம்பேட்டை முழுவதும் உள்ள ரோடு ஸ்தம்பித்து போனது என்ற ஒரு செய்தி வெளியானது. இதை பற்றி ரசிகர் ஒருவர் பராசக்தி படத்தை மிகவும் நக்கலடித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது அவன் அவன் பொங்கலுக்கு ஊருக்கு போறான். குரோம்பேட்டையையே ஸ்தம்பிக்க வைத்த எஸ்கேவாம்? டேய்..

அங்கு சரவணா ஸ்டோர் இருக்கு.. போத்தீஸ் இருக்கு.. நகைக்கடை இருக்கு.. துணிக்கடை இருக்கு,, பொங்கலுக்கு துணி எடுக்க போவாங்கடா… அங்க எப்பவுமே டிராஃபிக்காதான் இருக்கும்டா..என வயிறு வலிச்சு சிரிச்சு இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.