Parasakthi: சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் பராசக்தி.1960 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை சுதாகொங்கரா உருவாக்கியிருக்கிறார்.
இந்த படம் இந்தியாவில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. அதேநேரம், வெளிநாடுகளில் சிறப்பு காட்சியும், அதிகாலை காட்சியும் திரையிடப்பட்டது. அப்படி படம் பார்த்த சில ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயம் ரவி வில்லனாக அசத்தியிருக்கிறார்.. அதர்வா கெரியரில் இது ஒரு சிறந்த கதாபத்திரம். சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் வருவது போல ஒரு டம்மி ரோலில் நடித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருக்கிறது. காட்சிகளை ஈசியாக கணிக்க முடிகிறது.. பிலோ ஆவரேஜ்… 1.5 மதிப்பெண்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஜெயம் ரவி கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது.. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.. மற்றபடி படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை.. திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
முதல் பாதியை பார்த்த ஒரு ரசிகர் ‘படம் நன்றாகவே இருக்கிறது.. குறிப்பாக இடைவேளை காட்சி சிறப்பு.. சிவகார்த்திகேயன் செட்டிலாக நடித்திருக்கிறார்.. அதர்வா வரும் காட்சிகள் மற்றும் பாடல்கள் நன்றாக இருக்கிறது’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

வெளிநாட்டில் படம் பார்த்தவர்கள் படத்திற்கு நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
பராசக்தி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி படத்தில் ஒன்றுமில்லை.. 1960 காலகட்டத்திற்கு ரசிகர்களை கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை.. அதனால் ரசிகர்கள் நிகழ்காலத்திலேயே இருக்கிறார்கள்.. அதுவே படத்திற்கு பெரிய மைனஸ்.

படத்தில் வரும் காமெடி காட்சிகள் வொர்க் அவுட் ஆகவில்லை.. படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. மொத்தமாக சொன்னால் பராசக்தி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. நல்ல கன்டென்ட் ஆனால் சொல்லிய விதம் சரியில்லை’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதால் பராசக்தி வெற்றிப்படமாக அமையுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
