திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தால் அந்த படத்தில் நடித்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என எல்லாருக்குமே ஜாக்பாட்தான். ஏனெனில் ஒரு படத்தின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்த படத்தில் எதிரொலிக்கும். அதாவது, ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே அந்த நடிகர் தனது சம்பளத்தில் பல கோடிகளை ஏற்றிவிடுவார்.
அதை கொடுக்க தயாரிப்பாளரும் முன்வருவார். அதேதான் இயக்குநருக்கும்.. தயாரிப்பாளரை பொருத்தவரை ஹீரோவின் முந்தைய படம் ஹிட் என்பதால் அதிக விலைக்கு வியாபாரம் செய்வார். இதனால் அவருக்கு அதிக லாபம் கிடைக்கும். எனவே ஒரு நடிகரின் சம்பளம் மற்றும் படத்தின் வியாபாரம் அவரின் முந்தைய படத்தின் ரிசல்ட்டில் இருக்கிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்து வெளியான பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த படம் 100 கோடி வசூலை கூட தொடாது என்கிறார்கள். பல தியேட்டர்களும் காத்து வாங்குவதால் ஏறக்குறைய படம் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது.
இந்த ரிசல்ட் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பாதித்திருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். பராசக்தி படத்தின் ரிசல்ட் பார்த்த தயாரிப்பாளர் வெங்கட்பிரபுவை அழைத்து ‘பராசக்தி சரியாக போகவில்லை. படத்தின் பட்ஜெட்டை குறையுங்கள்.. நீங்கள் சொல்லும் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது.. அப்படி எடுத்தால் வியாபாரம் செய்ய முடியாது’ என்று சொல்ல வெங்கட் பிரபு அப்செட் ஆகிவிட்டாராம்.
ஏனெனில் ஏற்கனவே தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதற்காக பல கோடி பட்ஜெட்டை அவர் குறைத்தார். இனிமேல் இதில் பட்ஜெட்டை குறைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இது மூன்று மாநாடு. தைரியமாக செலவு செய்யுங்கள். படம் கண்டிப்பாக ஹிட்’ என தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.