இறுதிச்சுற்று சூரரைப்போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதாகொங்கரா இயக்கியுள்ள ஒரு பீரியட் திரைப்படம்தான் பராசக்தி. அதாவது 1960களில் தமிழகத்தில் பல ஊர்களிலும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்திய எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியான போது நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. படத்தில் சில காட்சிகள் மட்டுமே நன்றாக இருப்பதாகவும், படம் போர் அடிப்பதாகவும் பொதுவான ரசிகர்கள் சொன்னார்கள்.
ஒருபக்கம் இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான திரைப்படம் இது. ஹிந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்தி எவ்வளவு பேர் உயிரை விட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் படத்தை பார்த்துவிட்டு சொன்னார்கள்.
ஆனால் பராசக்தி ஒரு சீரியசான படம் என்பதால் பொங்கலை கொண்டாடும் மனநிலையில் உள்ள ரசிகனை இப்படம் திருப்திப்படுத்தவில்லை. அதன் காரணமாக இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூலும் இல்லை. 10ம் தேதி படம் வெளியான நிலையில் 12ம் தேதி இப்படம் படம் 50 கோடி வசூல் செய்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவ்னம் சமூக வலைதளங்களில் பதிவிட்டது. ஆனால் அதன்பின் மூன்று நாட்களாக வசூலை பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை.
ஒரு பக்கம் இந்த படம் இரண்டு நாட்களிலேயே வசூல் குறைந்துவிட்டது. பெரும்பாலான தியேட்டர்கள் காத்து வாங்குகிறது என்று செய்திகள் வெளியானது. ஒருபக்கம் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரகளை பதிவிடும் sacnilk இணையதளம் 6 நாட்களில் இந்த திரைப்படம் 35.93 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.