பரோட்டா காமெடி இந்த ஹீரோவுக்கு செய்தது தான்!... சுதீந்திரன் கேட்டதால் கொடுத்துவிட்டேன்.. இயக்குனர் சொன்ன ஷாக்!

by Akhilan |   ( Updated:2024-02-05 12:14:05  )
பரோட்டா காமெடி இந்த ஹீரோவுக்கு செய்தது தான்!... சுதீந்திரன் கேட்டதால் கொடுத்துவிட்டேன்.. இயக்குனர் சொன்ன ஷாக்!
X

Parota Comedy: தமிழ் சினிமாவில் அவ்வப்போது வரும் சில காமெடி காட்சிகள் பெரிய ரீச் கொடுத்துவிடும். அந்த காமெடியை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் சிரிப்பை நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு இடத்தினை பிடித்து இருக்கும் என்பது தான் உண்மை. அப்படி ஒரு லிஸ்ட்டில் இருப்பது தான் சூரி நடித்த பரோட்டா காமெடி.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்ளும் சூரியை கடைக்காரர் ஏமாற்ற நினைப்பார். ஆனால் அவருக்கே அல்வா கொடுத்து இருப்பார் சூரி. இதன் பின்னர் அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயர் நின்றது.

இதையும் படிங்க: சொல் பேச்சு கேட்ட சிவகார்த்திகேயன்!… தன் புரோமோஷனுக்காக அவரை பயன்படுத்தி கொண்ட அஜித்… பொறாமையின் உச்சம்

அப்படிப்பட்ட காமெடி முதலில் வெண்ணிலா கபடிக்குழுவுக்கு வைக்கப்பட்டது இல்லை. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்திற்காக உருவாக்கப்பட்ட காட்சி அது. அப்போ அந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் சூரி நடித்து இருப்பார். அவருக்காக உருவாக்கப்பட்டது தான் அந்த பரோட்டா காமெடி. ஆனால் அதை எடுக்க முடியாமல் போனது.

அப்போ இயக்குனர் சுசீந்திரன் என்னிடம் அந்த காமெடியை பயன்படுத்திக்கொள்ளவா எனக் கேட்டார். நானும் கெடுத்திடாமல் பயன்படுத்திக்கோ எனச் சொல்லியே கொடுத்தேன் எனவும் இயக்குனர் எழில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் சொல்லும் போது, அந்த காட்சியை சுசீந்திரன் நல்லா பண்ணி இருந்தார்.

மனம் கொத்தி பறவை பண்ணும் போது சூரியின் சம்பளம் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட அவர் கால்ஷீட்டை கணக்கு வைத்தால் 6 லட்சம் வரை வந்தது. அதனால் அவருக்கு ஒரு சின்ன கேரக்டராக அந்த படத்தில் மாற்றி 4 நாட்களுக்கு 2 லட்சம் பேசி நடிக்க வைத்தேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் எழில்.

இதையும் படிங்க: குடித்து விட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்!.. அவருக்கு நான் மூன்றாம் மனைவி… ரகசியத்தினை உடைத்த ராஜ்கிரண் மகள்

Next Story