Cinema News
வடிவேலுவை திட்ட பயந்து நின்ன துணை நடிகர்! பார்த்திபன் சொன்ன டிரிக் – இந்த சீன் இப்படித்தான் உருவாச்சா?
Vadivelu vs Parthiban: எத்தனையோ காம்போக்களை நாம் சினிமாவில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் திரையில் வடிவேலுவையும் பார்த்திபனையும் ஒன்றாக பார்த்தாலே எங்குமில்லாத சிரிப்பு நம்மையும் தாண்டி வெளிப்படும். அந்தளவுக்கு இருவரும் சேர்ந்து செய்த லூட்டிகள் படங்களில் ஏராளம்.
வடிவேலு சினிமாவில் ஒரு மகா கலைஞனாக புகழ்பெற்று இருந்தாலும் நிஜத்தில் அவருடன் சேர்ந்து நடித்த துணை நடிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தவராகவே காணப்படுகிறார். அந்த வகையில் வடிவேலுவால் மிகவும் பாதிக்கப்பட்டவர் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்.
இதையும் படிங்க: நீ ஒரு முடிவோடதான் இறங்கி இருக்க!.. பாதி உடையில் பவுசு காட்டும் விஜே பார்வதி…
சேரன் இயக்கத்தில் உருவான வெற்றிகொடி கட்டு படத்தின் மூலம் பெஞ்சமின் முதன் முதலாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே வடிவேலுவை திட்டி தீர்க்கிற மாதிரியான சீன். முதல் படம் என்பதால் சேரன் பெஞ்சமினிடம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம். ரீலை வேஸ்ட் பண்ணாம ஒரே ஷார்ட்டில் வசனத்தை பேசிவிட வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
பெஞ்சமின் அப்படி வடிவேலுவை திட்டும் போது வடிவேலு வாய்க்குள்ளாகவே ஏதோ பேசிக் கொண்டு பெஞ்சமினை நடிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாராம். இதனால் 6 ரீலுக்கு மேலாக போய்க் கொண்டிருக்க அதனால் கிட்டத்தட்ட 75000 ரூபாய் செலவாகிவிட்டதாம்.
இதையும் படிங்க:டவுசர் கூட போட மாட்ட! நீதான் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுப்பியா?!.. வீடியோ ஆதாரத்தோடு கலாய்க்கும் நெட்டிசன்கள்..
உடனே பார்த்திபன் நேராக பெஞ்சமினிடம் வந்து ‘என்னதான் பிரச்சினை? ’ என்று கேட்க அதற்கு பெஞ்சமின் கேமிராவுக்கு பின்னாடி வடிவேலு செய்ததை சொல்லியிருக்கிறார். ஓ இதுதான் பிரச்சினையா? என சொல்லிவிட்டு வடிவேலுவின் டிரைவரை அழைத்து காரை எடுத்துக் கொண்டு வடிவேலுவை ஒரு 5 கிமீ தூரத்திற்கு அழைத்துக் கொண்டு போ என்று சொல்லியிருக்கிறார்.
அந்த டிரைவரும் அப்படியே செய்து பெஞ்சமினிடம் ‘இப்போ கேமிராதான் வடிவேலு. நீ என்னெல்லாம் திட்டனும்னு நினைக்கிறீயோ திட்டு. கட் செய்து இணைத்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.அதன் பிறகே வெற்றிகொடி கட்டு படத்தில் பெஞ்சமின் வடிவேலுவை திட்டும் சீனை எடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஓவியராக ஆசைப்பட்ட சிவக்குமார் நடிகரானது எப்படி தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்!…