வடிவேலுவை விரட்டிவிட்டு காட்சியை எடுத்த பார்த்திபன்!. அட அந்த காமெடி செம ஹிட் ஆச்சே!..

Actor parthiban: என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வடிவேலு. அதன்பின் தேவர் மகன், சின்ன கவுண்டர், சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் கிராமத்து கதைகளில் அதிகம் நடிக்க துவங்கினார்.

அதில், சில படங்களில் கவுண்டமணியிடம் உதை வாங்கும் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒருகட்டத்தில் முக்கிய காமெடி நடிகராக மாறி பல படங்களிலும் நடித்தார். கவுண்டமணி சினிமாவில் நடிப்பது குறைந்ததும் அந்த இடத்தை வடிவேலு பிடித்தார்.

இதையும் படிங்க: வீணா வம்பை விலைக்கு வாங்கும் ஆர்.பி.செளத்ரி… வச்சு செய்யப்போகும் வடிவேலு…

வடிவேல் பலருடன் நடித்து காமெடி செய்திருந்தாலும் திரையில் பார்த்திபனும், அவரும் சேர்ந்து செய்த அலப்பறைகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வெற்றிக்கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, உன்னருகே நான் இருந்தால் என பல படங்களில் இருவரும் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

ஏனெனில் அப்பாவி போல வடிவேலுவும், அவரை எடக்கு மடக்காக பேசி திணறவைக்கும் வேடத்தில் பார்த்திபனும் நடித்து ரசிக்க வைத்தனர். அதுவும், வெற்றிக்கொடி கட்டு படத்தில் துபாய் ரிட்டனாக இருக்கும் வடிவேலுவை பார்த்திபன் வச்சி செய்த காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இதையும் படிங்க: இந்த வசனத்தை நான் பேச மாட்டேன்!.. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு செய்த ஆர்ப்பாட்டம்!..

இப்படத்தின் ஒரு காட்சியில் பெஞ்சமின் வடிவேலுவை அசிங்கமாக திட்டுவார். ஆனால், அவர் தன்னை அப்படி திட்டுவது பிடிக்காத வடிவேலு பெஞ்சமினை சரியாக நடிக்கவிடவில்லை. இதை தெரிந்துகொண்ட பார்த்திபன் வடிவேலுவையும், அங்கிருந்த கார் டிரைவரையும் அழைத்து ‘வடிவேலுவை 5 கிலோ மீட்டர் தூரம் கூட்டிட்டு போய்ட்டு திரும்பி வா’ என சொல்லிவிட்டாராம்.

அதன்பின் பெஞ்சமினிடம் ‘இப்போது வடிவேலு இல்லை. கேமராதான் வடிவேலு. உங்களுக்கு என்னவெல்லாம் திட்ட வருகிறதோ எல்லாத்தையும் திட்டுங்க’ என சொல்ல பெஞ்சமினும் பொளந்து கட்டியுள்ளார். வடிவேலுவை பெஞ்சமின் அசிங்கமாக திட்டும் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தகவலை பெஞ்சமின் ஊடகம் ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இப்படி ஆகணும்னு நினைச்சேன்.. வடிவேலு கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்!… புலம்பும் காமெடி நடிகர்…

 

Related Articles

Next Story