வீணா வம்பை விலைக்கு வாங்கும் ஆர்.பி.செளத்ரி… வச்சு செய்யப்போகும் வடிவேலு…

0
383
vadivelu

வடிவேலு தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர். இவரின் காமெடிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.

தனது சிறப்பான காமெடி நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமடைய தொடங்கினார்.

இதையும் வாசிங்க:ரசிகன் செஞ்ச செயலால் ஆடிப்போன அஜித்! சென்னையில் படப்பிடிப்பை நிறுத்தியதற்கும் இதுதான் காரணமாம்

பிரண்ட்ஸ், ஏய், சந்திரமுகி திரைப்படத்தில் இவரின் காமெடிகள் மக்களை பெரிதளவில் ஈர்த்தன. பின் இம்சை அரசன் 23அம் புலிகேசி, தெனாலிராமன் போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாகவும் வலம் வந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மாமன்னன். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் போன்ற பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இவருக்கு வெற்றியை தேடிதந்தது.

இதையும் வாசிங்க:கதையே இல்லாமல் அஜித்தை நடிக்க அழைத்த இயக்குனர்… சரியான பாடம் சொல்லி கொடுத்த தல…

முன்பு இருந்த வடிவேலு இப்போது இல்லை என பலர் பேசி கொள்கின்றனர். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ஷங்கர் நினைத்தார். ஆனால் வடிவேலுவுக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படத்தினை தொடர்ந்து எடுக்க முடியவில்லை. இதனால் ஷங்கருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டமும் ஏற்பட்டது.

இவ்வாறு இருக்கையில் தற்போது வடிவேலு ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் இவருடன் இணைந்து ஃபகத் ஃபாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தினை அறிமுக இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்குகிறார். வடிவேலு தன்னுடைய உண்மையான குணத்தை இந்த இயக்குனரிடம் காட்டினால் இயக்குனரின் நிலைமை திண்டாட்டம்தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க:தனியா வந்தா ஆப்பு வச்சிருவாங்க! எதிராளியுடன் கூட்டணி வைத்த விஜய் – லியோ சக்ஸஸ் மீட்டில் யார் வராங்கனு தெரியுமா?

google news