பத்திக்கொண்டு எரிந்த பருத்திவீரன் பிரச்னை!... திடீர் அமைதி ஏன்? உண்மையை உடைத்த அமீர்

Ameer: நடிகர் கார்த்திக்கு வாழ்க்கை கொடுத்த பருத்திவீரன் படத்தின் பிரச்னை பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அது அமீருடன் கேட்ட கேள்வியால் வெளிச்சத்துக்கு வந்தது. எரிந்த நெருப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பேட்டி எண்ணெயை ஊற்றியது. எல்லா இயக்குனர்களும் அமீருக்கு ஆதரவாக இறங்கினார்.

வரிசையாக ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் கொடுக்க ஒரு வழியாக தன் பேட்டியில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து அமீருக்கு தீர்வு வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் சில நாட்களிலேயே அந்த பிரச்னை ஓய்ந்தது.

இதையும் படிங்க: எதற்காக இந்த வெட்டி விளம்பரம்? ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் வசூலே இவ்ளோதான்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

இதுகுறித்து அமீரிடம் கேட்ட போது, அதை குறித்த நான் பேசவே இல்லை. ஒரு பேட்டியில் ஜப்பான் மீட்டிற்கு ஏன் போகவில்லை என்றனர். அப்போது தான் கேஸ் இருக்கும் போது எப்படி போவது எனக் கேட்டேன். விஷயம் வெளியில் வந்தது. படத்தின் தயாரிப்பாளர் பேட்டி கொடுக்கிறேன் என்று உண்மையை சொல்லாமல் புது விளக்கத்தினை கொடுத்தார்.

என்னை காயப்படுத்துவது போல பலவற்றை பேசினார். மொத்தமாக என் கேரியரை காலி செய்யும் நோக்கத்தில் கொடுத்த பேட்டியே பிரச்னையை அதிகப்படுத்தியது. 15 வருடங்களுக்கு முன்னரே அவர் சொத்து நீதிமன்றத்தில் அடமானமாக வைத்து இருக்கிறார். அப்படி கொடுத்தவருக்கு வழக்கு தெரியாமல் இருக்குமா?

இதையும் படிங்க: ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

அவர் அப்படி பேசியதால் தான் சம்மந்தப்பட்டவர்கள் இறங்கி பேசும் நிலை வந்தது. அது அவர்கள் மீது எனக்கு பெரிய நன்றி கடனை உருவாக்கி விட்டது. அந்த படத்தால் எனக்கு கிடைத்த பண இழப்பை விட நீதிக்காக தான் நீதிமன்றம் ஏறினேன். ஆனால் இப்போ மக்கள் எனக்கு ஆதரவாக நின்ற போதே எனக்கு நீதி கிடைத்துவிட்டது.

அந்த படம் குறித்து பேச இன்னும் நிறையவே இருக்கிறது. இன்னும் சொல்வதற்கு அத்தனை தகவல் இருக்கிறது. காலம் வரும் போது அவர்களே பேச வைப்பார்கள் என நம்புகிறேன். எனக்கும் சூர்யாவுக்கு புரிதல் பிரச்னை இருந்தது. அதை இடையில் இருந்தவர்கள் வளர்த்து விட்டனர்.

வாடிவாசல் தொடங்கினால் கண்டிப்பாக நான் நடிப்பேன். அதில் பிரச்னை இல்லை. பருத்திவீரன் பிரச்னையை இதுவரை நாங்க பேசிக்கொண்டதே இல்லை. அப்படி பேசி இருந்தால் எப்போதோ இது முடிந்து இருக்கும். வெளியில் சந்தித்தால் கை குலுக்கி கொள்வதே எங்க வழக்கம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: என்கிட்டையே திமிரா நடந்துக்கலாமா? சீண்டிய தயாரிப்பாளரை கடனாளியாக்கிய கமல்ஹாசன்…

 

Related Articles

Next Story