விஜயின் அக்மார்க் இயக்குனர்! அஜித்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் என்ன செய்தார் தெரியுமா
Vijay Ajith: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் இவர்கள் வரிசையில் இருப்பவர்கள் அஜித்தும் விஜயும். இன்று கோலிவுட்டின் இருபெரும் நட்சத்திரங்களாக இருக்கும் இவர்கள் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருந்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் சேர்ந்து நடித்தார்கள்.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தனித்தனியாக படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொழிலில் போட்டிகள் இருந்தாலும் நட்பு ரீதியாகவே விஜய் குடும்பமும் அஜித் குடும்பமும் இன்று வரை பழகி வருகிறார்கள். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!
அதே நேரம் விஜய் இப்போது கோட் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களையும் முடித்த கையோடு முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆக்ஷன் படங்களையே கொடுத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜயை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பேரரசு. சிவகாசி , திருப்பாச்சி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் பேரரசு. அதனால் விஜயின் ஆஸ்தான இயக்குனர் என்ற முத்திரையும் பேரரசு மீது விழுந்தது.
இதையும் படிங்க: கலெக்ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..
இந்த நிலையில்தான் அஜித்தை இயக்கும் வாய்ப்பு பேரரசுவிற்கு கிடைத்தது. இருந்தாலும் விஜயின் இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்டதால் நேரடியாக விஜயை சந்தித்து எனக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. போகட்டுமா என்று கேட்டாராம் பேரரசு. உடனே விஜய் ‘ஐயோ முதலில் போய் அத பாருங்க’ என்று சொன்னபிறகே பேரரசு அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை எடுத்தாராம்.