Connect with us
pistha

Cinema News

பிஸ்தா படத்தின் ஃபுல் ஆடியோ ரிலீஸ்…அசத்தல் jukebox வீடியோ இதோ…

தமிழ் சினிமாவில் மீண்டும் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படமாக ‘பிஸ்தா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை எம்.ராஜேஷ் பாரதி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை ஒன் மேன் புரடெக்‌ஷன் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் புவனேஸ்வரி சாம்பசிவம் என்பவர் தயாரித்துள்ளார். மேலும், மெட்ரோ படத்தில் நடித்த சதீஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிர்துளா முரளி மற்றும் அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

pistha

மேலும், நடிகர் செந்தில், சதீஷ், யோகிபாபு என மூன்று பேர் காமெடியில் கலக்கியுள்ளனர். இப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். பிஸ்தா திரைப்படம் அவருக்கு 25வது திரைப்படமாகும். இப்படத்திற்கு எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் பாரதி என்பவர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை இயக்குனர் ரமேஷ் பாரதி, யுகபாரதி மற்றும், ஆர்.ஜே. விஜய் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஒவ்வொன்றாக வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மொத்தபாடல்களும் அடங்கிய jukebox தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் அழகுல ராசாத்தி, என்னை கொல்ல வந்த, ஆத்தாடி பார்த்தேனே, நான் என்ன பாவம் மற்றும் வா வா என மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன மேலும் இப்படம் வருகிற 7ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top